Tuesday, December 25, 2012

தமிழ்ச் செம்மொழி வரலாறு


வணக்கம் மாணவச் செல்வங்களே!

முதலாமாண்டு இரண்டாம் பருவத்தில் தற்பொழுது உரைநடைக்கான பாடத்திட்டமாக தமிழ்ச் செம்மொழி வரலாறு உள்ளது. இப்பாடத்திட்டத்திற்கு உரிய சரியான நூல்கள் இல்லாத நிலையில் தற்பொழுது அதுகுறித்த கட்டுரைகள் இணையத்தின் வெவ்வேறு தளங்களில் கிடைப்பவறைத் தொகுத்து தர முற்பட்டுள்ளேன்.  அதற்கு முன்பாக தமிழ்ச்செம்மொழி வரலாறு குறித்து தங்களுக்கு உரிய பாடத்திட்டத்திட்டம் என்ன என்பதையும், அதுகுறித்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பெறும் செய்திமடல்களின் இணைப்பையும் இப்பதிவில் முதலில் வெளியிடுகின்றேன். தொடர்ந்து தலைப்பு சார்ந்த கட்டுரைகளும் இடம்பெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்புடன்
மு.தியாகராஜ்


உரைநடைக்கான பாடப்பகுதி:
(ஒவ்வொரு தலைப்பையும் சொடுக்கி அவற்றுக்குரிய கருத்துக்களை வாசிக்கவும்)


பரிதிமாற்கலைஞ்ர் அவர்கள் முதல் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் வரை (அறிஞர்கள்- அமைப்புகள்- நிறுவனங்கள்- இயக்கங்கள் தொடர் முயற்சிகள் அறப்போராட்டங்கள் - உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை)

பார்வை நூல்கள்
ஆய்வரங்க சிறப்புமலர் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை 2010
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலர் கோவை 2010
சாலினி இளந்திரையன், தமிழ்ச் செம்மொழி ஆவணம், மணிவாசகர் பதிப்பகம்
சென்னை 2005
கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கழக வெளியீடு 

செம்மொழி செய்திமடல்களை வாசிக்க கீழே சொடுக்கவும்:


6 comments:

  1. 'கல்லூரித் தமிழ்” வலைப்பூ நிர்வாகியர்க்கு வணக்கம்.
    இன்றுதான் வேறொன்று தேடும்போது, உங்கள் வலையில் விழுந்து மகிழ்ந்தேன்.
    கல்லூரிப் பேராசிரியர் புதியன கற்பதில்லை என்னும் பொதுவசைமொழி உம்மால் கழிந்ததென்று மகிழ்கிறேன். புரியும் தமிழில் -அசை சீர் பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல்- பழந்தமிழைக் கணினியில் தருவது, அதுவும் மாணவர்க்கு உரிய பாடப்பகுதியைக் கணினியில் தருவது பாராட்டுக்குரிய பணி. பார்வையாளர் எண்ணிக்கை ஏன் குறைகிறது என்று பாருங்கள். மாணவர் அனைவரையும் பார்க்க, சந்தேகங்களை இணையவழியும் கேட்கச் செய்யுங்கள். அவர்களின் படைப்புகளை இணைப்பில் தந்துவாருங்கள். தங்களின் வெற்றி வளரும் இளைய தலைமுறைத் தமிழின் வெற்றியாக வேண்டும். வணக்கம்.

    ReplyDelete
  2. பொதுவாகவே பட்டம் படித்தோரில் பெரும்பான்மையோர் படித்து முடித்தபின் பணியேற்றாலும் பின்னர் படிப்பதில்லை...கல்லூரிப் பேராசிரியர்களை மட்டும் சு(ட்)டுவதை ஏற்க முடியாது....இப்பணி நற்பணி ... இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்களும் நல்வரவேற்புகளும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக

    ReplyDelete
  3. அ ரு மை அண்ணா. உங்களின் ஆத்மார்த்தமான பணி தொடர்க.

    ReplyDelete
  4. அ ரு மை அண்ணா. உங்களின் ஆத்மார்த்தமான பணி தொடர்க.

    ReplyDelete