Thursday, October 18, 2012

தமிழ் வினா வங்கி - இரண்டாமாண்டு


இரண்டாமாண்டு பயிலும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம், தேர்வு நெருங்கி விட்டது, நீங்கள் அதிக மதிப்பெண்களைப் பெறும் பொருட்டு முனைப்புடன் படித்து வருவீர்கள் என்பது தெரியும். அதற்குப் பெரிதும் துணைநிற்பது முந்தைய தேர்வுகளுக்கான வினாத்தாள்களில், கேள்விகள் எப்படி கேட்கப்பட்டுள்ளன என்பதை ஆய்ந்து படிக்கும் முறையாகும். இங்கு உங்கள் வசதிக்காக முந்தைய பல்கலைக்கழகத் தேர்வுகளில் கேட்கப்பட்டக் கேள்விகளை நமது குருநானக் கல்லூரி - தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் (சுழற்சி-2) தொகுத்தளித்துள்ளனர். அவற்றிற்கான விடைகளைத் தயார் செய்து மீண்டும் மீண்டும் படிக்கவும், தேர்வில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறவும் வாழ்த்துகின்றோம்.

தமிழ் அடித்தளப்படிப்பு – தாள்-3
வினாத்தாள் அமைப்பு முறை – வினாக்கள் பகிர்வு
பாடம்
பகுதி-அ
பகுதி-ஆ
பகுதி-இ
செய்யுள்
4
4
2
இலக்கணம்
1
-
-
சிறுகதை
-
-
1
இலக்கிய வரலாறு
3
2
2
பயன்பாட்டுத் தமிழ்
4
1
-
மொத்தம்
12
7
5

10×2=20
5×5=25
3×10=30

குருநானக் கல்லூரி (சுழற்சி - 2)
தமிழ்த் துறை
   தமிழ் வினா வங்கி – இரண்டாமாண்டு  
மூன்றாம் பருவம்  - CLA3C
    நேரம்: 3 மணிநேரம்             மதிப்பெண்கள்: 75

பகுதி- அ :                                             (10×2=20)
(2 மதிப்பெண் கேள்விகள்)
(2 மதிப்பெண் வினாக்கள் 12 கொடுக்கப்பட்டு 10 க்கு விடையளிக்க வேண்டும்)
NOV 2009 வினா தாள்
1.   புலவர் தொழில் யாது ? (Nov 2009)
2.   ’கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக. (Nov 2009)
3.   சீவக சிந்தாமணி வழங்கும் வேறு பெயரை எழுதுக
4.   குகனின் ஊர் எது? (Nov 2009)
5.   இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப் பெறுவன எவை?(Nov 2009)
6.   திருக்குறள் – சிறு குறிப்பு வரைக. (Nov 2009)
7.   ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல்கள் இரண்டினைக் கூறுக. (Nov 2009)
8.   கீழ்ககாணும் புலவர் பெயர்களை அகர வரிசையில் எழுதுக.
(Nov 2009)
அறிவுடை நம்பி, அகத்தியர், அபிராமிபட்டர், அம்மூவனார், அரிசில்கிழார், அருணகிரிநாதர், அமிதசாகரர், அடியார்க்கு நல்லார்.
9.   ஆடை என்னும் பொருள் தரக்கூடிய நான்கு சொற்களை எழுதுக.
10. பிழை நீக்கம் செய்க:
(அ) குலத்தில் தண்ணீர் உல்லது. 
(ஆ) வள்ளவனுக்குப் புள்ளும் ஆயுதம்.
     11. தேவையான இடங்களில் வல்லொற்று இடுக. (Nov 2009)
           அ. கடனை திருப்பி தா.
           ஆ. வெற்றி கனியை பறி
     12. உவமையணியை விளக்குக. (Nov 2009)

APR 2010 வினா தாள்
     13. அறிவுடையார் குணநலன்கள் யாவை ?
     14. கண்ணகியின் உருவங்கண்டு பாண்டிய மன்னர் கூறியதென்ன?
     15. குகனின் உன்னத இயல்பாக ஒன்றினைச் சுட்டுக.
     16. ’நீர்வார் கண்ணே எம்முன் வந்தோய்’ – விளக்குக.
     17. உருவக அணி என்றால் என்ன ?
     18. சிலப்பதிகாரக் கதையை, மொழிந்த விதங்குறித்து எழுதுக.
     19. கம்பர் – குறிப்பு வரைக.
     20. இராமாயணம் உரைத்த நீதிக்கருத்து யாது?
     21. பின்வரும் ஆசிரியர்களைக் காலவரிசைப்படுத்துக:
வள்ளுவர், வைரமுத்து, தொல்காப்பியர், காளமேகம், கண்ணதாசன்.
     22. வள்ளுவங் கூறிய ”உய்ப்பது” – பற்றி எழுதுக.
23. மா, கை ஆகியவற்றிற்குரிய சொற்பொருள்களை முறையே
   எழுதுக.
24. பிழை நீக்கி எழுதுக:
   பிளையின்றி தமிளாசிரியர் கண்னகி பர்றி சொண்ணார்

Nov 2010 வினாத் தாள்
25. அன்பிலார் எதனை உடையவர் என்று வள்ளுவர் கணிக்கிறார் ? அன்புடையார்க்கு என்ன ஆகும் ?
26. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கு மற்றொரு பெயர் என்ன ? ஏன் அவ்வாறு குறிப்பர் ?
27. இராமனது உள்ளம் குகன் மீது படரக் காரணங்கள் யாவை ?
28. விமலையை, சீவகன் வர்ணித்த ஓர் உவமையைத் தருக.
29. ’தெய்வமும் உண்டுகொல்’ என்றதன் பொருளை எழுதுக.
30. “பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்” என்றது யார் ? பொருள் காண்.
31. உவமை அணிக்குரிய விளக்கத்தைத் தருக.
32. அறிஞர் அண்ணாவின் ஐந்து கதைப் பெயர்களை எழுதுக.
33. ’எப்போதும் மார்னிங்’ல காஃபி சாப்பிட்டதும் பேத் முடிச்சிட்டு டிபன் பண்ணிய பிறகே பிரேயர் செய்வேன்’ – பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுக.
34. ‘வாழ்தல் வேண்டி ஊழ்வினைத் துரப்ப’ – விவரி
35. இரட்டைக் காப்பியங்கள் யாவை ? ஏன் அப்படி அழைக்கப்பட்டன?
36. அணிகளில் தாயணி எது ? விளக்குக.

 APR 2011 வினாத் தாள்
37. கல்வியின் உயர்வை வள்ளுவம் வழி சுருக்கி தருக.
38. கண்ணகியைப் பார்த்த பாண்டிய அரசனின் கருணை உரையினை விவரி.
39. குகனின் நட்புள்ளத்தை ஒரு சான்றுடன் காண்.
40. சிலப்பதிகாரக் கதையை யார் கூறி எவர் எழுதினார்?
41. அணிகளில் தாயணி எது? எப்படி?
42. இரட்டைக் காப்பியங்கள் பற்றிக் குறிப்பிடுக.
43. கம்பராமாயணம் பற்றி எழுதுக.
44. இராமாயணத்தின் பாடுபொருளைத் தெரிவி.
45. பின்வரும் ஆசிரியர்களைக் காலவரிசைப்படுத்துக.      வைரமுத்து, வள்ளுவர், கம்பர், காளமேகம், தொல்காப்பியர்.
46. நன்றின்பால் உய்ப்பதூ பற்றிய குறளைப் பொருள் பிரித்துத் தருக.
47. கண், கேள்வி ஆகிய சொற்களின் பிறபொருள் நயங்களை எழுதுக.
48. பிழை நீக்கி எழுது:                                   வாளப்பலம் வளுக்கி விலுந்தோர் எம்பளது பேற். இது உண்மை,தவரில்லை.                                        

 NOV 2011 வினாத் தாள்
49. திருவள்ளுவர் காட்டும் கேள்விச் செல்வத்தின் சிறப்பைக் குறிப்பிடுக
50. கண்ணகி தன்னைப் பாண்டியனிடம் அறிமுகப்படுத்திய பாங்கைச் சுட்டுக.
51. காய சண்டிகை தன் பசியை எவ்வாறு போக்கிக் கொண்டாள்?
52. பொருள்களை ஆராயும் முறை குறித்துச் சீவக சிந்தாமணி கூறும் செய்தி யாது?
53. குகன் இராமனிடம் வேண்டிக் கொண்டவை யாவை?
54. காரைக்கால் அம்மையார் அடியவர்களை எவ்வாறு போற்றினார்?
55. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் – இக்குறட்பாவில் அமைந்த அணியை விளக்குக
56. கொக்கரக்கோவில் இடம் பெறும் சுந்தரத்தின் நிலையைக் குறிப்பிடுக.
57. நான்மணிக்கடிகை – பெயர்க்காரணம் தருக.
58. பின்வரும் நூல்களை அகரவரிசைப்படுத்துக.             புறநானூறு, கலித்தொகை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, ஏலாதி.
59. அரசனைக் குறிக்கும் வேறுசொற்கள் யாவை?
60. பிழை நீக்கி எழுதுக.                                
  திறுவல்லுவர் அரத்தின் சிரப்பைத் தெழிவாக விக்கியுள்ளார்

APR 2012 வினாத் தாள்
61. அன்பில்லாதவரின் உடம்பின் தன்மையைத் திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகின்றார்?
62. தீக்கனாவில் இரவிலும் பகலிலும் இடம்பெற்ற பொருள்கள் யாவை?
63. விருச்சிக முனிவரின் தோற்றப் பொலிவை மணிமேகலை எவ்வாறு சுட்டுகிறது?
64. சீவகனிடமிருந்த பொருள்களைச் சுட்டுக.
65. காரைக்கால் அம்மையாரின் கணவன் யார்?
66. செங்கோடன் செவ்வாழையைப் பண்ணையாருக்குக் கொடுக்கக் காரணம் என்ன?
67. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழி குறிப்பிடும் நூல்கள் யாவை?
68. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்-  இக்குறளில் பயின்ற அணியைக் குறிப்பிடுக.
69. கீழகாணும் புலவர்களை அகர வரிசைப்படுத்துக
பரணர், அறிவுடைநம்பி, கபிலர், நல்லுருத்திரன், பாரிமகளிர்.
70. சொன்னான் என்னும் ஒரு பொருளைத் தரும் நான்கு சொற்களைச் சுட்டுக.
71. தொடர்ப்பிழை நீக்குக.
(அ) அண்ணன் ஊரிலிருந்து வந்தது
(ஆ) நாயும் நரியும் ஓடியது.
      72. வல்லொற்று இடுக.
         கடனை திருப்பி கேட்டவரிடம் இன்று பணத்தை கொடுக்க
         வேண்டும்.

(5 மதிப்பெண் கேள்விகள்)
      பகுதிஆ :                                               (5×5=25)
  (5 மதிப்பெண் வினாக்கள் 7 கொடுக்கப்பட்டு 5 க்கு விடையளிக்க வேண்டும்)
NOV 2009 வினா தாள்
1.   அன்புடைமை அதிகாரப் பொருளை விளக்குக. (Nov 2009)
2.   வாயிற் காப்போன் பாண்டியனிடத்து கண்ணகியின் தோற்றம் பற்றிக் கூறியவற்றைப் புலப்படுத்துக. (Nov 2009)
3.   சீவகனை எவ்வாறெல்லாம் காக்க வேண்டுமென்று நந்தட்டன் பதுமுகனிடம் கூறுகின்றான்? (Nov 2009)
4.   பரதனைக் கண்ட குகன் கூறியன யாவை? (Nov 2009)
5.   மணிமேகலை குறித்து எழுதுக. (Nov 2009)
6.   பெரியபுராணத்தின் சிறப்புகளை எடுத்துரைக்க. (Nov 2009)
7.   வல்லினம் மிகா இடங்கள் ஐந்தினைத் தருக. (Nov 2009)

APR 2010 வினாத் தாள்
8.   விருந்து உபசரித்தல் பண்பு கம்பராமாயணத்தில் எங்ஙனம் சுட்டப்படுகிறது ? (NOV 2010)
9.   வழக்குரை காதையில் கனவு பலித்ததா ? ஆய்க.
10. விமலையாரின் பண்புகளைத் தொகுத்தெழுதுக.
11. காயசண்டிகையின் பிறவி வரலாற்றைத் தெரிவி.
12. அன்புடைமையின் ஆழத்தை வள்ளுவம் வழியாக வெளிப்படுத்துக.
13. வல்லினம் மிகுமிடங்களை விவரி.
14. இலக்கியங்களில் அணிகள் பெறுமிடங்கள் யாவை ?

 NOV 2010 வினாத் தாள்
15. அரசன் வினவியதையும் கண்ணகி மறுமொழி கூறியதையும் எழுதுக.
16. ‘பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும்’ என்றதற்க்குரியோர் யார்? ஏன் ?
17. பல பொருள் குறித்த ஒரு சொல்’ – பற்றி விளக்கம் தருக.
18. உலக அறவியின் நல்லுள்ளம் பற்றி விவரி.
19. வல்லினம் மிகா இடங்களைச் சான்றுகளுடன் காட்டுக.
20. அணிகள் இல்லா இலக்கியம், எடுபடுமா ? திறனாய்க.
21. ‘செவ்வாழை’ கதைப் பொருளை எழுதி ஆய்க.                  

APR 2011 வினாத் தாள்

22. வழக்குரை காதையில் கனவு எங்ஙனம் அமைக்கப்பட்டது?
23. விசையையின் பாத்திரப் படைப்பைச் சீவக சிந்தாமணி வழியாக வெளிப்படுத்துக.
24. விருந்தின் மாட்சியை கம்பர் வழியாக விவரி.
25. உலக அறவியின் வருகையை மணிமேகலை எங்ஙனமெல்லாம் சிறப்பிக்கின்றது?
26. அறிவுடைமையின் உயர்வுகளாகக் குறளார் கூறுவன யாவை ?
27. சேக்கிழார் அமைத்த திருவிளையாடல் விபரங்களை வெளிப்படுத்துக.
28. வல்லொற்று மிகா இடங்களைத் தருக.

 NOV 2011 வினாத் தாள்
29. அறிவுடைமையின் சிறப்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?
30. கோப்பெருந்தேவி கண்ட தீக்கனவினை விளக்குக.
31. காயசண்டிகை சாபம் பெற்ற வரலாற்றை விளக்குக.
32. கம்பர் குகனை அறிமுகப்படுத்திய தன்மையைப் புலப்படுத்துக.
33. பெரிய புராணத்தின் அமைப்பும் சிறப்பும் பற்றி விளக்குக.
34. வல்லினம் மிகும் இடங்களைச் சான்று தந்து விளக்குக.
35. ஒரு வசீகர வரலாறு காட்டும் கண்ணுசாமியின் குணநலன்களைப் புலப்படுத்துக.

APR 2012 வினாத் தாள்
36. கேளிவிச் செல்வத்தால் வரும் நன்மைகளை விளக்குக.
37. கண்ணகி கூறிய சோழ மன்னர்களின் வரலாற்றை விளக்குக.
38. காயசண்டிகைக்கு விருச்சிக முனிவர் சாபமிட்டதை விளக்குக.
39. விசையை தன் மகன் சீவகனிடம் கூறிய செய்திகளைப் புலப்படுத்துக.
40. கம்பர் காட்டும் குகனின் தோற்றப் பொலிவை விளக்குக.
41. நீதி இலக்கியங்களுள் திருக்குறள் பெறுமிடத்தை விளக்குக.
42. வல்லொற்று மிகா இடங்கள் இரண்டினைச் சுட்டுக.

(10 மதிப்பெண் வினாக்கள்)
      பகுதி- இ :                                           (3×10=30)
(10 மதிப்பெண் வினாக்கள் 5 கொடுக்கப்பட்டு 3 க்கு விடையளிக்க வேண்டும்)
NOV 2009 வினா தாள்
1.   உலக அறவி புக்க காதையில் உரைக்கப்பெறும் செய்திகளைத் தொகுத்துரைக்க. (Nov 2009)
2.   காரைக்காலம்மையாரின் சிறப்புகளைப் புலப்படுத்துக(Nov 2009).
3.   ‘பேய் ஓடிப்போச்சு’ (அல்லது) ‘கொக்கரக்கோ’ சிறுகதையைத் திறனாய்க. (Nov 2009)
4.   நீதி இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கருத்துகளைத் தொகுத்துரைக்க. (Nov 2009)
5.   சோழர்கால இலக்கண நூல்களை விவரிக்க. (Nov 2009)

APR 2010 வினாத் தாள்
6.   குகப்படல மாண்புகளை வரிசைப்படுத்து.
7.   செவிச்செல்வம் பற்றி 10 குறட்பாக்களின் பொழிவைத் தருக.
8.   வழக்குரை காதையில் இடம்பெறுகின்ற கதாப்பாத்திரங்களின் குணநலன்களை ஆராய்க.
9.   “செவ்வாழை”யில் இடம்பெறும் பொதுவுடமைச் சித்தாந்தங்களை விவரி.
10. திருத்தக்க தேவரின் திறமையான உவமைகளை விமலையார் இலம்பகம் வழி வெளிப்படுத்துக.

NOV 2010 வினாத் தாள்
11. ”அன்பின் சிறப்பும் அறிவின் உயர்வும்” குறளதிகாரங்களின் வழி வெளிப்படுத்துக.
12. வழக்குரை காதையில் ‘அரசன் அரசியர்’ பற்றி இளங்கோவடிகள் குறிப்பிடுவன யாவை ?
13. திருத்தக்க தேவரின் கற்பனை உணர்வுகளை வரிசைப்படுத்துக.
14. ‘சீர்திருத்தச் சிந்தனைகளே அறிஞர் அண்ணாவின் கதை முடிச்சுகளாயின’ – மதிப்பிடுக.
15. நீதி இலக்கியங்களின் அமைப்பும் சிறப்பும் பற்றி விவரிக்க.    

 APR 2011 வினாத் தாள்
16. விமலையாரின் பாத்திரப்படைப்பினைத் திருத்தக்க தேவர் வழி நின்று புலப்படுத்துக.
17. செவிச் செல்வம் பற்றி வள்ளுவம் கூறிய செய்திகளைக் காண்க.
18. சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதை செய்த திருப்பங்களை ஆய்க.
19. கொக்கரக்கோ சிறுகதையின் அடிநிலைக் கருத்தும் அதன் வளர்ச்சியும் பற்றி எடுத்தெழுதுக.
20. குகப்படலத்தின் அமைப்பு முறையைப் புலப்படுத்துக.

NOV 2011 வினாத் தாள்
21. கல்வி, கேள்வி பற்றி திருவள்ளுவர் கூறும் செய்திகளைத் தொகுத்தெழுதுக.
22. கண்ணகி வழக்குரைத்த சிறப்பை விவரித்தெழுதுக.
23. குகனின் இயல்பினையும் அவன் இராமனிடம் கொண்ட பக்தியையும் விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.
24. பிழை நீக்கி எழுதும் முறை குறித்து விவரித்தெழுதுக.
25. செவ்வாழைக் கதையைக் கூறி அறிஞர் அண்ணாவின் சீர்த்திருத்தச் சிந்தனைகளைத் தொகுத்தெழுதுக.

APR 2012 வினாத் தாள்
26. அறிவுடைமை என்னும் அதிகாரத்தின் வழித் திருவள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்தெழுதுக.
27. இளங்கோவடிகளின் நுண்மாண் நுழைபுலத்தை வழக்குரை காதை கொண்டு நிறுவுக.
28. உலக அறவி புக்க காதை கூறும் செய்திகளைத் தொகுத்தெழுதுக.
29. பரதனைக் கண்டு குகன் கொண்ட சினத்தினைத் தொகுத்தெழுதுக.
30. ’விழுப்புரம் சந்திப்பு’ என்னும் சிறுகதையை மதிப்பிடுக.


குறிப்பு: இவ்வினா வங்கியை மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் மேலும் கேள்விகள் எப்படியெல்லாம் கேட்கப்படும் என்பதை உணர்ந்து ஆழமாகப் படித்தால், அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.
                   வாழ்த்துக்கள்
ஆக்கம் : தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் (சுழற்சி-2)
குருநானக் கல்லூரி


இவ்வினா வங்கியினை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய

கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

இரண்டாமாண்டு வினா வங்கி

1 comment: