Wednesday, September 22, 2010

கல்லூரித் தமிழ் - அறிமுகம்




கல்லூரிகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களுக்கான தமிழ் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு,  மாணவர்களுக்குத் தேவையான பாடக்குறிப்புகளையும், விளக்கங்களையும் இதில் உள்ளீடு செய்யலாம் என்ற எண்ணத்தோடு இந்த வலைப்பூவினை உருவாக்கியுள்ளேன்

முடிந்தவரை அவர்களது பாடங்களுக்கான செய்யுள் மூலமும் அதன் உரையையும் தமிழ் இணையக் கல்விக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இணையத்தளங்களில் இருந்து எடுத்து ஒரே பக்கத்திலான பதிவாக மாணவர்கள் பயன்கருதி உள்ளிட்டுள்ளேன். மாணவ சமுகம் பயன் பெறட்டும். வாழ்த்துக்கள்

இவ்வலைப்பூ அனைத்து விதத்திலும் வெற்றி பெற தமிழ் கூறு நல்லுலகின் கருத்துக்களையும், உதவிகளையும் இருகரம் கூப்பி வரவேற்கின்றேன்.
     இவண்
ஈகைவேந்தன்

2 comments:

  1. பத்திகளை பார்வையிட பின் புலம் தடையாக இருக்கிறது ஆகவே அதை மங்கியவாறு அமைத்தால் நன்றாக இருக்கும் . உங்களுக்கும் சரியாக தோன்றினால் மாற்றி அமையுங்கள். தமிழில் புலமை பெறவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது ஆனால் இயந்திரவியலில் பட்டம் பெற்றுள்ளேன் இப்போது வயது ௬௭ இருப்பினும் உங்கள் வலைப்பூ எனக்கும் உதவுகிறது . நன்றியுடன்
    கே.என் சிவமயம் (k.natarajan7@gmail.com)

    ReplyDelete
  2. 'கள்' பன்மை விகுதி 'ஹள்' என உச்சரிக்கும்படி எழுத வேண்டும். உதாரணமாக, வாழ்த்துகள், கருத்துகள்...... என 'க்' வலி மிகாமல் எழுத வேண்டும். விதிவிலக்கு: பூக்கள்......

    ReplyDelete