Saturday, October 13, 2012

தமிழ் வினா வங்கி - முதலாமாண்டு


மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேர்வுக்கான காலம் நெருங்கி விட்டது, முதல் முறையாக பல்கலைக்கழகத் தேர்வினை எதிர் கொள்ளும் மாணவர்களாகிய நீங்கள் அதற்காக முனைப்புடன் படித்து வருவீர்கள். அதனுடன் நமது புத்திகூர்மையையும் பயன்படுத்தி வெற்றிக்கான இலக்கை அடைய வேண்டும். அதற்கு பெரிதும் துணைநிற்பது முந்தைய தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேள்விகள் எப்படி கேட்கப்பட்டுள்ளன என ஆய்ந்து படிக்கும் முறையாகும். இங்கு உங்கள் வசதிக்காக முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை நமது குருநானக் கல்லூரி - தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் (சுழற்சி-2) அரிதின் முயன்று தொகுத்தளித்துள்ளனர். அவற்றிற்கான விடைகளைத் தயார் செய்து மீண்டும் மீண்டும் படித்து தேர்வில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.


குருநானக் கல்லூரி (சுழற்சி - 2)
தமிழ்த் துறை
   தமிழ் வினா வங்கி – முதற்பருவம் - CLA1A
நேரம்: 3 மணிநேரம்                                   மதிப்பெண்கள்: 75
    பகுதி- அ :                                                     (10×2=20)
     (2 மதிப்பெண் வினாக்கள் 12 கொடுக்கப்பட்டு 10 க்கு விடையளிக்க வேண்டும்)
1.   மனோன்மணீயம் – குறிப்பு வரைக
2.   மனோன்மணீயம் நாடகம் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது ?
3.   தமிழ் தெய்வ வணக்கம் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?
4.   பேராசிரியர் சுந்தரனார் – குறிப்பு வரைக
5.   தமிழ் மொழியை ஏன் கடலுடன் ஒப்பிட கூடாது என சுந்தரனார் கூறுகின்றார் ?
6.   ’அம்பலத்துள் உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே’ – காரணத்தை விளக்குக.
7.   காலத்தாலும் தமிழ் மொழி அழியாது எனப் போற்றும் பாங்கினை எழுதுக.
8.   சங்கத்தார் தமிழ் மொழியை எவ்வாறு காத்தனர் என சுந்தரனார் விளக்குகின்றார்?
9.   முதுமொழி நீ என சுந்தரனார் தமிழைப் போற்றும் திறத்தை எழுதுக
10.சுந்தரனார் தமிழ் மொழியை எந்த நிலையில் வைத்துப் புகழ்ந்துள்ளார் ? 
11. கடல் குடித்த குடமுனியோடு தமிழைத் தொடர்புபடுத்தி ஆசிரியர் சுந்தரனார் கூறுவதென்ன? (octo 2008)
12. சிவபெருமானோடு தமிழைத் தொடர்புபடுத்தி ஆசிரியர் சுந்தரனார் கூறுவதென்ன?(octo 2009)
13. ’வெல்லும் படைகள் வேறுளவோ’ – இங்கு கவிமணி குறிப்பிடும் படைகள் யாவை?
14. எது மூடச்செயல் என்று கவிமணி குறிப்பிடகின்றார்?
15. கவிமணியின் படைப்புகள் யாவை?
16. கவிமணி குறிப்பு வரைக.
17. கடவுள் எங்கிருப்பதாக கவிமணி குறிப்பிடுகின்றார்?
18. இராமலிங்க அடிகளார் குறிப்பு வரைக.
19. வள்ளலார் இயற்றிய நூல்கள் யாவை?
20. வள்ளலார் நிறுவிய நிறுவனங்கள் யாவை?
21. வள்ளலார் பதிப்பித்த நூல்கள் யாவை?
22. திருவருட்பா குறிப்பு வரைக.
23.தெள்ளமுதாக இன்பம் தரும் இறைவனின் இயல்புகளை இராமலிங்க அடிகளார் எவ்வாறு எடுத்துரைக்கின்றார்.
24.இறைவன் வீற்றிருக்கும் இடமாகக் கவிமணி எதனைக் குறிப்பிடுகின்றார் ?
25. பாரதியார் எழுதிய முப்பெரும் நூல்கள் யாவை?
26. ‘பண்டைக்காலத்து பைத்தியம்’ என்று பாரதியார் யாரைக் குறிப்பிடுகிறார்? ஏன்?
27.பாரதியார் கண்ணனை எவ்வெவ்வகைகளில் பார்த்துப் பரவசப்படுகிறார் ?
28. உச்சிப்போய் தன் வால் பார்க்கும் – இடம் சுட்டுக.
29. ”விளக்கினைத் தொட்டபிள்ளை வெடுக்கெனக் குதித்ததைப் போல்” இடம் சுட்டி பொருள் விளக்குக
30. கிளிகளின் செயல்களைப் பாரதிதாசன் எங்ஙனம் விவரிக்கின்றார்?
31. ஆலமரத்தின் விழுதுகளைக் கண்டு அச்சங்கொண்ட குரங்கின் செயலை விளக்குக
32. செத்தும் கொடுத்த சீதகாதிகள் யார் ?
33. கள்ள ஓட்டு குறித்துத் தமிழன்பன் யாது குறிப்பிடுகின்றார் ?
34. ஈரோடு தமிழன்பனின் படைப்புகள் யாவை ?
35. வார்த்தை வாக்கியம் பேசியது – எப்போது ?
36. நிலத்தை ஜெயித்த விதை என்று வைரமுத்து யாரைக் குறிப்பிடுகிறார் ? இக்கவிதை எந்நூலில் இடம் பெற்றிருக்கிறது?
37. ’உன் கிழிசல் கோட்டு கவிதா தேவிக்குப் பீதாம்பரமானது’ – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக
38. “ ஏகாதிபத்திய எரிமலையை ஒரு தீக்குச்சி சுட்டதே இது எப்படி ?”- இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக
39. ”ஒரு வீரிய விதை முளைக்கும் போதே பூமியை ஜெயிக்கிறதே” - இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக
40.  புதுக்கவிதை, மரபுக்கவிதை வேறுபாட்டினை விளக்குக.


(5 மதிப்பெண் கேள்விகள்)
  பகுதி- ஆ :                                                   (5×5=25)
  (5 மதிப்பெண் வினாக்கள் 7 கொடுக்கப்பட்டு 5 க்கு விடையளிக்க வேண்டும்)

1.   பேராசிரியர் சுந்தரனார் தமிழ்மொழியை தெய்வ நிலைக்கு உயர்த்திப் பாடும் திறத்தை எழுதுக.
2.   தமிழின் சிறப்புகளாகப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை கூறுவன யாவை?
3.   இறை இன்பத்தை இயற்கை தரும் இன்பமாக இராமலிங்க அடிகளார் கூறும் பாங்கினை எழுதுக
4.   இறைவனை வழிபடும் முறை குறித்துக் கவிமணி கூறுவன யாவை ?
5.   கோயில் வழிபாடு என்ற கவிதையில் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்தெழுதுக
6.   சேவகரால் பட்ட சிரமம் குறித்துப் பாரதியார் கூறுவனவற்றை எழுதுக
7.   பாரதியார்- குறிப்பு வரைக
8.   கண்ணனால் வரும் நன்மைகள் எவை எவையென பாரதியார் கூறுகின்றார்?
9.   நெஞ்சில் உள்ள காதல் பெரிது
எனக்குக் காசு பெரிதில்லை – இடம் சுட்டி பொருள் விளக்குக.
10. கண்ணனைப் பெற என்ன தவம் செய்துவிட்டேன் என்று பாரதி கூறும் உட்பொருளை ஆய்க.
11. கண்ணன் எனை ஆட்கொள்ள காரணமும் உள்ளது என பாரதி கூற வந்தது யாது?
12. பாரதியார் கண்ணனைச் சேவகனாய் அடையாளப்படுத்தும் முறையை எடுத்துரைக்க
13. பாரதியார் கண்ணனைச் சீடராக ஏற்ற சூழல் பற்றி எழுதுக
14. வாழ்க்கைத் தத்துவங்களாகக் கவிமணி கூறுவனவற்றை தொகுத்தெழுதுக
15. ’எமது நாட்டில் எல்லோர்க்கும் உரிய மாபெரும் பண்டிகை’ - இடம் சுட்டி பொருள் விளக்குக
16. ‘வாக்குசீட்டுகள்’ குறித்து ஈரோடு தமிழன்பன் கூறுவன யாவை ?
17. நிலத்தை ஜெயித்த விதை கவிதையின் பொருளைப் புலப்படுத்துக
18. இராமலிங்க அடிகள் பெற்ற பேரின்பத்தை எடுத்துரைக்க.
19. நம் நாட்டின் தேர்தல் முறை குறித்து கவிஞர் ஈரோடு தமிழன்பன் கூறுவனவற்றைத் தொகுத்தெழுதுக
20. ’எட்டயபுர தீக்குச்சி’ என பாரதியை வைரமுத்து எவ்வகையில் உருவகப்படுத்துகிறார்?
21. தமிழ் எழுத்தாளர் ஒருவரை நேர்காணல் செய்க.
22. விளையாட்டு வீரர் ஒருவரை நேர்காணல் காண்க.
23. சரித்திர நாவல்கள் பற்றி விவரிக்க.


(10 மதிப்பெண் வினாக்கள்)
      பகுதி- இ :                                           (3×10=30)
  (10 மதிப்பெண் வினாக்கள் 5 கொடுக்கப்பட்டு 3 க்கு விடையளிக்க வேண்டும்)
1.   தமிழ்மொழியின் சிறப்புகளாகப் பேராசிரியர் சுந்தரனார் கூறுவன யாவை ?
2.   தமிழ்த்தாயின் பெருமைகளாகப் பேராசிரியர் சுந்தரனார் கூறுவன யாவை ?
3.   இறையனுபவங்களாக இராமலிங்க அடிகள் கூறுவனவற்றை எடுத்துரைக்க
4.   வாழ்க்கைத்தத்துவங்களாக கவிமணி கூறுவன யாவை ?
5.   பாரதிதாசன் இயற்கை அழகில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதை ‘ஆல்’ என்ற கவிதை வழி புலப்படுத்துக
6.   ’ஆல்’ கவிதையில் பாரதிதாசன் கூறும் கருத்துகளைத் தொகுத்தெழுதுக
7.   பாரதிதாசன் இயற்கையை வருணிப்பதில் வல்லவர் என்பதை நும் பாடப்பகுதி கொண்டு விளக்குக
8.   பாரதியாருக்கும் கண்ணனுக்கும் இடையே நடந்த உரையாடலை விளக்கி எழுதுக.
9.   நிலத்தை ஜெயித்த விதை’ என்ற கவிதையின் மையப்பொருளை விவரிக்க
10. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்கள் ஐவர் குறித்த செய்திகளை எடுத்துரைக்க
11. புதுக்கவிதையின் வருகையும் வளர்ச்சியும் குறித்து கட்டுரை வரைக
12. சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து ஒரு கட்டுரை வரைக
13. தமிழ் நாடக வளர்ச்சி குறித்து விவரிக்க
14. வேலையில்லா திண்டாட்டம் பற்றி கட்டுரை வரைக
15. தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதைகளின் வளர்ச்சியை விவரிக்க
16. எரிபொருள் சிக்கனம் பற்றி கட்டுரை வரைக
17. சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் பற்றி கட்டுரை வரைக
18. இயற்கை சீற்றங்களும் பாதுகாப்பு முறைகளும் குறித்து பொதுக்கட்டுரை வரைக
19. அன்றாட வாழ்வில் அறிவியல் என்னும் தலைப்பில் பொதுக்கட்டுரை வரைக
20. தற்காலக் கவிஞர்களில் வைரமுத்துவின் இடம் குறித்து எழுதுக.
21. சமூக சேவகர் ஒருவரை நேர்காணல் செய்க.

இலக்கணக் குறிப்புத் தருக: (2 மதிப்பெண் வினா)


1.   பிறைநுதல்
2.   நறுந்தேன்
3.   தொடுகடல்
4.   எலாம்
5.   ஏகாதிபத்திய எரிமலை
6.   நறுந்திலகம்
7.   சாதிசாதி
8.   எரிகரி
9.   மாபெரும்
10. உயர்கோபுரம்
11. காட்டுப்பூனை
12. நிலமடந்தை
13. தடதட
14. கால நதி
15. எண்ணிஎண்ணி
16. திகழ்பரதம்
17. நறுநெய்
18. அடிமலர்



பொருந்தியச்சொல் தருக: (2 மதிப்பெண் வினா)
1.   அலங்கல் – வளையல், மாலை, அணிகலன்
2.   வேகவதி – கங்கை, காவேரி, வைகை
3.   கோது – மலர், மகரந்தம், இலை
4.   அரன் – திருமால், பிரமன், சிவன்
5.   தத்தை – கிளி, புறா, ஆந்தை
6.   வேழம் – சிங்கம், யானை, மான்
7.   ஞானம் – அன்பு, அறிவு, ஆற்றல்
8.   நுதல் – முகம், கூந்தல், நெற்றி
9.   தூபம் – மணப்புகை, விளக்கு. பன்னீர்
10. ஆழி – குளம், கடல், ஆறு
11. பொருப்பு – மலை, குன்று, பாறை
12. கவின் – இருள், ஒளி, அழகு
13. இடர் – இன்பம், துன்பம், மறதி
14. முகில் – வானம், மேகம், விண்மீன்
15. கால் – காற்று, நாற்று, ஊற்று 

கலைச்சொல்லாக்கம் :


1.   Photo synthesis
2.   E-mail
3.   Technolog
4.   Globalisation
5.   Telescope
6.   Software
7.   Internet
8.   Remote control
9.   Camera
10. Fine art
11. Diameter
12. Multi media
13. Key board
14. Boiler
15. Pollution
16. Booster
17. Symbol
18. Compact disc
19. Archeology
20. Cathode
21. Genes
22. Satellite

23. Monitor
24. Liberalisation
25. Video cassette
26. Galaxy

மரபுத் தொடர்களுக்குத் தமிழ் வடிவம் தருக :


1.   Once in blue moon
2.   Red letter day
3.   ABC
4.   Blow one’s own trumpet
5.   Join the majority
6.   By accident
7.   Blood is thicker then water
8.   Eleventh hour
9.   Fall off
10. Throw dust in one’s eyes
11. Blow hot and cold
12. A man of letter
13. Build castle in the air
14. A bird’s eye view
15. Self help is the best help
16. Rainy days
17. Kith and kin
18. Red handed
19. Cock and bull story
20. Black and white




குறிப்பு: இவ்வினா வங்கியை மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் மேலும் கேள்விகள் எப்படியெல்லாம் கேட்கப்படும் என்பதை உணர்ந்து ஆழமாகப் படித்தால், அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
                         வாழ்த்துக்கள்
ஆக்கம் : தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் (சுழற்சி-2)
குருநானக் கல்லூரி- சென்னை-600 042


இவ்வினா வங்கியினை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்
முதலாமாண்டு வினாவங்கி

No comments:

Post a Comment