கம்பராமாயணம் - கும்பகர்ணன் வதைப் படலம்
இராவணன் கும்பகருணனை அழைத்து வருமாறு பணியாளரை ஏவ, அவர் கும்பகருணனது அரண்மனையை அடைதல்
ஆயிரம் மல்லர்கள் கும்பகருணனை எழுப்புமாறு அவன் அரண்மனையை அடைதல்
சென்றனர், பத்து நூற்றுச்
சீரிய வீரர் ஓடி,
‘மன்றல் அம் தொங்கலான்தன்
மனம்தனில் வருத்தம் மாற
இன்று இவன் முடிக்கும் ‘என்னா,
எண்ணினர்; எண்ணி, ஈண்ட,
குன்றினும் உயர்ந்த தோளான்
கொற்ற மாக் கோயில் புக்கார்.49
உரை
மல்லர்கள் தம் வலியால் அரண்மனை வாயிலுள் புகுதல்
திண்திறல் வீரர் வாயில்
திறத்தலும், சுவாச வாதம்
மண்டுற, வீரர் எல்லாம்
வருவது போவது ஆக,
கொண்டு உறுதடக்கை பற்றி,
குலம் உடை வலியினாலே
கண் துயில் எழுப்ப எண்ணி,
கடிது ஒரு வாயில் புக்கார். 50
உரை
வீரர்கள் கும்பகருணனைத் துயிலெழுப்பச் சங்கு தாரை முதலியவற்றால் ஒலி எழுப்புதல்
‘இங்கு இவன் தன்னை யாம் இன்று
எழுப்பல் ஆம் வகை ஏது? ‘என்று,
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு,
மெய் துணுக்கம் உற்றார்;
அங்கைகள் தீண்ட அஞ்சி,
ஆழ் செவி அதனினூடு,
சங்கொடு தாரை, சின்னம்,
சமைவுறச் சாற்றலுற்றார். 51
உரை
கோடு, இகல் தண்டு, கூடம்,
குந்தம், வல்லோர்கள் கூடி,
தாடைகள், சந்து, மார்பு,
தலை எனும் அவற்றில் தாக்கி,
வாடிய கையர் ஆகி, மன்னவற்கு
உரைப்ப, ‘பின்னும்
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும்
விரைவின் ‘என்றான்.52
உரை
கட்டுறு கவன மா ஓர்
ஆயிரம் கடிதின் வந்து,
மட்டு அற உறங்குவான் தன்
மார்பு இடை, மாலை மான
விட்டு உற நடத்தி, ஓட்டி,
விரைவு உள சாரி வந்தார்;
தட்டுறு குறங்கு போலத்
தடம் துயில் கொள்வது ஆனான். 53
உரை
பணியாளர் கும்பகருணனை எழுப்ப இயலாமையை இராவணனுக்கு அறிவித்தல்
கொய் மலர்த் தொங்கலான் தன்
குரைகழல் வணங்கி, ‘ஐய!
உய்யலாம் வகைகள் என்று, இங்கு
எழுப்பல் ஆம் வகையே செய்தும்,
கய் எலாம் வலியும் ஓய்ந்த;
கவனமா காலும் ஓய்ந்த;
செய்யலாம் வகை வேறு உண்டோ?
செப்புதி, தரெிய ‘என்றார்.54
உரை
இராவணன் சூலம் மழு முதலியன எறிந்தாவது கும்பகருணனை எழுப்புக எனல்
‘இடை பேரா இளையானை,
இணை ஆழி மணி நெடுந்தேர்
படை பேரா வரும்போதும்,
பதையாத உடம்பானை,
மடை பேராச் சூலத்தால்,
மழு வாள் கொண்டு, எறிந்தானும்,
புடை பேராத் துயிலானைத்
துயில் எழுப்பிக் கொணர்க ‘என்றான்.55
உரை
ஆயிரம் வீரர் முசலம் கொண்டு கன்னத்தில் அடிக்கக் கும்பகருணன் துயிலெழுதல்
என்றலுமே அடிவணங்கி, ஈர்
ஐஞ்ஞூறு இராக்கதர்கள்,
வன்தொழிலால் துயில்கின்ற
மன்னவன்தன் மாடு அணுகி,
நின்று இரண்டு கதுப்பும் உற
நெடு முசலம் கொண்டு அடிப்ப,
பொன்றினவன் எழுந்தாற் போல்,
புடை பெயர்ந்து அங்கு எழுந்திருந்தான்.56
உரை
மூவகை உலகும் உட்க,
முரண் திசைப் பனைக்கை யானை
தாவரும் திசையின் நின்று
சலித்திட, கதிரும், உட்க,
பூ உளான், புணரி மேலான்,
பொருப்பினான் முதல்வர் ஆய
யாவரும் துணுக்குற்று ஏங்க,
எளிதினின் எழுந்தான் வீரன்.57
உரை
கும்பகருணனது உருவின் தன்மை
விண்ணினை இடறும் மோலி;
விசும்பினை நிறைக்கும் மேனி;
கண்ணெனும் அவை இரண்டும்
கடல்களின் பெரிய ஆகும்;
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர்
வேந்தன் பின்னோன்
மண்ணினை அளந்து நின்ற
மால் என வளர்ந்து நின்றான்.58
உரை
எழுந்த கும்பகருணன் உணவு முதலியன
உட்கொள்ளுதல்
உறக்கம் அவ் வழி நீங்கி உணத் தகும்
வறைக்கு அமைந்தன ஊனொடு வாக்கிய
நறைக் குடங்கள் பெறான் கடை நக்குவான்
இறக்க நின்ற முகத்தினை எய்துவான்.59
உரை
ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடம் க(ள்)ளும் நுங்கினான்;
ஏறுகின்ற பசியை எழுப்பினான்;
சீறுகின்ற முகத்து இரு செங்கணான்.60
உரை
எருமை ஏற்றை ஓர் ஈர் அறுநூற்றையும்
அருமை இன்றியே தின்று இறை ஆறினான்
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு
உருமை ஏற்றைப் பிசைந்து எரி ஊதுவான்.61
உரை
இருந்த போதும் இராவணன் நின்றெனத்
தரெிந்த மேனியன்; திண் கடலின் திரை
நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான்;
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான்;62
உரை
உதிர வாரியோடு ஊனொடு எலும்பு தோல்
உதிர வாரி நுகர்வது ஓர் ஊணினான்;
கதிர வாள் வயிரப் பணைக் கையினான்;
கதிர வாள் வயிரக் கழல் காலினான்;63
உரை
இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான்;
வரும் களிற்றினைத் தின்றனன்; மால் அறா
அரும் க(ள்)ளில் திரிகின்றது ஓர் ஆசையான்;64
உரை
சூலம் ஏகம் திருத்திய தோளினான்;
சூல மேகம் எனப் பொலி தோற்றத்தான்;
காலன்மேல் நிமிர்மத்தன்; கழல் பொரு
காலன்; மேல் நிமிர் செம் மயிர்க் கற்றையான்;65
உரை
எயில் தலைத் தகர தலத்து இந்திரன்
எயிறு அலைத்த கர தலத்து எற்றினான்;
அயில் தலைத் தொடர் அங்கையன்; சிங்க ஊன்
அயிறலைத் தொடர் அங்கு அகல் வாயினான்;66
உரை
உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர்
குடல் கிடந்து அடங்கா நெடுங் கோளினான்;
கடல் கிடந்தது நின்றதன்மேல் கதழ்
வட கடுங்கனல் போல் மயிர்ப் பங்கியான்;67
உரை
திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட
மிக்கு அடங்கிய வெங்கதிர் அங்கிகள்
புக்கு அடங்கிய மேருப் புழை என
தொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான்;68
உரை
காம்பு இறங்கும் கன வரைக் கைம்மலை
தூம்பு இறங்கும் மதத்தின துய்த்து உடல்
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினன்;
பாம்பு உறங்கும் படர் செவிப் பாழியான்;69
உரை
தமையன் அழைத்த செய்திகேட்டு, இராவணன் முன்சென்று கும்பகருணன் வணங்குதல்
‘கூயினன் நும்முன் ‘என்று அவர் கூறலும்
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ;
வாயில் வல்லை நுழைந்து மதிதொடும்
கோயில் எய்தினன் குன்று அ(ன்)ன கொள்கையான்.70
உரை
நிலை கிடந்த நெடுமதிள் கோபுரத்து
அலை கிடந்த இலங்கையர் அண்ணலைக்
கொலை கிடந்த வேல் கும்பகருணன் ஓர்
மலை கிடந்தது போல வணங்கினான்71
உரை
இராவணன் தம்பியைத் தழுவி, அவனுக்கு உணவு முதலியன அளித்துப் போர்க்கோலம் செய்தல்
வன் துணைப் பெருந்தம்பி வணங்கலும்
தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்
நின்ற குன்று ஒன்று நீள் நெடுங் காலொடும்
சென்ற குன்றைத் தழீஇ அன்ன செய்கையான்.72
உரை
உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறைக்
குடன் நிரைத்தவை ஊட்டி தசைக் கொளீஇ
கடல் நுரைத் துகில் சுற்றி கதிர்க் குழாம்
புடை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான்.73
உரை
பேர விட்ட பெரு வலி இந்திரன்
ஊர விட்ட களிற்றொடும் ஓடுநாள்
சோர விட்ட சுடர்மணி ஓடையை
வீரபட்டம் என நுதல் வீக்கினான்.74
உரை
மெய் எலாம் மிளிர் மின்வெயில் வீசிட
தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய
கய்யின் நாகம் என கடல் மேனியில்
தயெ்வம் நாறு செம் சாந்தம் உம் சேர்த்தினான்.75
உரை
விடம் எழுந்தது போல் நெடு விண்ணினைத்
தொட உயர்ந்தவன் மார்பு இடைச் சுற்றினான்
இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள்
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான்.76
உரை
கும்பகருணன் போர்க்கோலம் செய்ததற்குக்
காரணம் வினாவுதல்
அன்ன காலையில் ‘ஆயத்தம் யாவையும்
என்ன காரணத்தால்? ‘என்று இயம்பினான்
மின்னின் அன்ன புருவமும் விண்ணினைத்
துன்னு தோளும் இடம் துடியா நின்றான்.77
உரை
இராவணன் கும்பகருணனைப் போர் செய்ய ஏவுதல்
‘வானரப் பெருந் தானையர் மானிடர்
கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும்
ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர்
போனகத் தொழில் முற்றுதி போய் ‘என்றான்.78
உரை
கும்பகருணன் போர் நேர்ந்தமைக்கு வருந்தி இராவணனுக்கு அறிவுரை கூறுதல்
‘ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே? 79
உரை
‘கிட்டியதோ செரு? கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ? முனம் சொன்ன சொற்களால்
திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே!80
உரை
‘கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால் ஐயா!81
உரை
‘புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு
குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் 82
உரை
‘கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும்;
கெடுத்தனை நின் பெருங் கிளையும்; நின்னையும்
படுத்தனை; பலவகை அமரர் தங்களை
விடுத்தனை; வேறு இனி வீடும் இல்லையால்.83
உரை
‘அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால்; அதன்
திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும்
நிறம் உனக்கு அளித்தது; அங்கு அதனை நீக்கி நீ
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார்.84
உரை
‘தஞ்சமும் தருமமும் தகவுமே அவர்
நெஞ்சமும் கருமமும் உரையுமே; நெடு
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்
உஞ்சுமோ? அதற்கு ஒரு குறை உண்டாகுமோ?85
உரை
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு
ஒன்று உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்
நன்று அது; நாயக! நயக்கிலாய் எனின்
பொன்றினை ஆகவே கோடி; போக்கு இலாய்.86
உரை
‘காலினின் கருங்கடல் கடந்த காற்றது
போல வன் குரங்கு உள; சீதை போகிலள்;
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
கோல் உள; யாம் உளேம்; குறை உண்டாகுமோ?87
உரை
‘தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின்
ஐ அறு தம்பியோடு அளவளாவுதல்
உய்திறம்; அன்று எனின் உளது வேறும் ஓர்
செய்திறம்; அன்னது தரெியக் கேட்டியால்;88
உரை
‘பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம் ‘என்று உணரக் கூறினான்.89
உரை
இராவணன் கும்பகருணனைச் சினந்து
மொழிதல்
‘உறுவது தரெிய அன்று; உன்னைக் கூயது
சிறுதொழில் மனிதரைக் கோறி சென்று; எனக்கு
அறிவுடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை;
வெறிவிது உன் வீரம் ‘என்று இவை விளம்பினான்.90
உரை
‘மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும்
உறங்குதி போய் ‘என உளையக் கூறினான்.91
உரை
‘மானிடர் இருவரை வணங்கி மற்றும் அக்
கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்
ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;
யான் அது புரிகிலேன்; எழுக போக! ‘என்றான்.92
உரை
‘தருக என்தேர் படை சாற்று என் கூற்றையும்;
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும்;
இருகை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
பொருக வெம்போர் ‘எனப் போதல் மேயினான்.93
உரை
போருக்கு எழுந்த இராவணனை வணங்கி ‘பொறுத்தி ‘என்று கூறி, கும்பகருணன் போருக்குச் செல்ல விடைபெறுதல்
அன்னது கண்டு அவன் தம்பியானவன்
பொன் அடி வணங்கி ‘நீ பொறுத்தியால் ‘என
வல் நெடுஞ் சூலத்தை வலத்து வாங்கினான்
‘இன்னம் ஒன்று உரை உளது ‘என்னக் கூறினான். 94
உரை
‘வென்று இவண் வருவென் என்று
உரைக்கிலேன்; விதி
நின்றது, பிடர் பிடித்து
உந்த நின்றது;
பொன்றுவென்; பொன்றினால்,
பொலன்கொள் தோளியை,
“நன்று “ என, நாயக,
விடுதல் நன்று அரோ.95
உரை
‘இந்திரன் பகைஞனும் இராமன் தம்பி கை
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்;
தந்திரம் காற்று உறு சாம்பல்; பின்னரும்
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய்.96
உரை
‘என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் நன்று அரோ.97
உரை
‘இற்றை நாள் வரை, முதல்,
யான் முன் செய்தன
குற்றமும் உள எனின்
பொறுத்தி; கொற்றவ!
அற்றதால் முகத்தினில்
விழித்தல்; ஆரிய!
பெற்றனென் விடை ‘என,
பெயர்ந்து போயினான். 98
உரை
இராவணன் கும்பகருணனை அழைத்து வருமாறு பணியாளரை ஏவ, அவர் கும்பகருணனது அரண்மனையை அடைதல்
‘நன்று இது கருமம் ‘என்னா, ‘நம்பியை நணுக ஓடிச்
சென்று இவண் தருதிர்
‘என்றான்; என்றலும், நால்வர் சென்றார்;
தென்திசைக் கிழவன் தூதர்
தேடினர் திரிவர்
என்ன,
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற
மாக் கோயில் புக்கார். 43
உரை
கும்பகருணனைப்
போருக்கு அனுப்பும் இச்செயல் செயத்
தக்கதே என்று
சொல்லி; (தூதரை அழைத்த இராவணன்
அவர்களிடம்) நீங்கள் ஓடிப்போய் ஆடவர் திலகனாய கும்பகருணனை இங்கே அழைத்து
வாருங்கள் என்றான்; இவ்விதமாக இராவணன் கூறிய
அளவிலே; தெற்குத்திசைத் தலைவனாகிய இயமனது
தூதர்; தேடித்திரிவது போல,; நான்கு பேர் சென்றார்கள்;
அவர்கள் குன்றைக்
காட்டிலும் உயர்ந்த தோள்களை உடைய கும்பகருணனது வெற்றி
பொருந்திய பெரிய
அரண்மனைக்குள் சென்று புகுந்தார்கள்.
பணியாளர் கையாலும் தூணாலும் தாக்கவும் கும்பகருணன் எழுந்திராமை
கிங்கரர்
நால்வர் சென்று, அக் கிரி அனான் கிடந்த கோயில்
மங்குல்
தோய் வாயில் சார்ந்து, ‘மன்ன நீ உணர்தி ‘என்ன,
தம்
கையின் எழுவினாலே தலை செவி தாக்கி, பின்னும்
வெம்
கணான் துயில்கின்றானை வெகுளியால் இனைய சொன்னார். 44
உரை
பணியாளர்களாகிய
கிங்கரர்கள் நால்வர் போய் மலையைப் போன்றவனாகிய கும்பகருணன் படுத்துறங்கும் அரண்மனையின்
மேகம் படிந்துள்ள
வாயிலை அடைந்து;
அரசனே நீ துயில் விட்டு எழுவீர்
என்று சொல்லி தங்கள் கையில் உள்ள இரும்புத் தூண்களால் தலையிலும் செவியிலும் தாக்க
அவ்வாறு செய்த பின்னும்; கொடிய கண்களையுடைய
தூங்குகின்ற கும்பகருணனைப் பார்த்து
சினத்தினால் இச்சொற்களைச்
சொல்லலானார்.
எழுப்பச் சென்ற கிங்கரர் வெகுளியால் கூறுவன
‘உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது, இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்
கறங்கு போல
வில் பிடித்த கால தூதர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்! இனிக்
கிடந்து உறங்குவாய்! 45
உரை
உறங்குகின்ற
கும்பகர்ணனே; உங்களுடைய; பொய்யானவாழ்வு எல்லாம்; இன்றில் இருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது; அதனைக் காண்பதற்காக எழுந்திருப்பாய் எழுந்திருப்பாய்;
காற்றாடி போல் எல்லா இடத்திலும்திரிகின்ற; வில்லைப்
பிடித்த; காலனுக்குத்
தூதரானவர்; கையில் இனிப் படுத்து தூங்குவாயாக.
‘என்றும் ஈறு இலா அரக்கர் இன்பமாய வாழ்வு எலாம்
சென்று தீய, நும்
முனோன் தெரிந்து தீமை தேடினான்;
இன்று இறத்தல்
திண்ணமாக, இன்னும் உன் உறக்கமே?
அன்று அலைத்த
செங்கையால் அலைத்து அலைத்து, உணர்த்தினார். 46
உரை
முடிவில்லாத
அரக்கர்குலத்தின் இன்பமான மாய வாழ்வுக்கெல்லாம், உன் முன் பிறந்தவனாகிய இராவணன் தெரிந்தே
தீமை தேடினான்; நீ இன்று இறத்தல் உறுதியான பின்னும் இன்னும் உறங்குகின்றாயே? என்று
உணர்த்துவது போலவே தம் கைகள் சிவக்கும்படியாக அவனை எழுப்ப முயன்றனர்.
கிங்கரர் கும்பகருணனை எழுப்ப முடியாமையைத் தரெிவிக்க, குதிரை யாளி முதலியவற்றை மிதிக்கவிட்டு எழுப்புங்கள் என்று இராவணன் ஏவுதல்
என்று
சொல்ல, அன்னவன் எழுந்திராமை கண்டு போய்,
மன்றல்
தங்கு மாலை மார்ப! வன் துயில் எழுப்பலம், ‘
அன்று,
‘கொள்கை கேண்மின் ‘என்று, மாவொடு ஆளி ஏவினான்,
ஒன்றின்
மேல் ஒர் ஆயிரம் உழக்கி
விட்டு எழுப்புவீர். 47
உரை
என்று பலவாறு சொல்லி எழுப்பவும்;
அந்தக் கும்பகருணன்
-உறக்கத்தில் இருந்து எழுந்திராமையைக் கண்டு
இராவணனிடம் திரும்பிப் போய்; மணம் நிறைந்த மாலை அணிந்த மார்பை உடையவனே, கும்பகருணனை வலிய உறக்கத்தில்
இருந்து எழுப்ப வல்லோம் அல்லோம்; என்று கூற; அப்போது (இராவணன்); செய்யத்தக்க செயலைக் கேண்மின்
என்று கூறி;
- ஒன்றன் மேல் ஒன்றாக; ஓராயிரக்கணக்கான குதிரைகளையும் யாளிகளையும்; மிதிக்கச் செய்து எழுப்புவீர்; என்று
அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
யானையும் யாளியும் எழுப்ப முடியாமல் திரும்பியதைத் தரெிவிக்க, இராவணன் மல்லரைச் சேனையோடு செல்லுமாறு ஏவுதல்
‘அனைய தானை அன்று செல்ல,ஆண்டு நின்று பேர்ந்திலன்;
இனைய சேனை
மீண்டது ‘என்று இராவணற்கு இயம்பலும்,
‘வினையம் வல்ல நீங்கள் உங்கள்தானையோடு சென்மின் ‘என்று,
இனைய மல்லர்
ஆயிராரை ஏவி
நின்று இயம்பினான். 48
உரை
இராவணனால் அனுப்பப்பட்ட ஆயிரம்
மாவோடாளியான அந்தச் சேனை; அப்போது கும்பகருணனை மிதித்துச் செல்லவும்
உறங்கிய இடத்தில்; இருந்து
அவன் அசையவில்லை; இந்தச் சேனை
எழுப்ப முடியாமல் திரும்பியது
என்று; கிங்கரர்
நால்வரும் இராவணனுக்குச் சொல்ல இராவணன் இப்படிப்பட்ட தொழில் செய்வதில்
வல்லமை உடைய ஆயிரம் மல்லர்களை அழைத்து, நீங்கள் உங்கள் படையுடன் செல்லுங்கள்;
என்று அவர்களுக்கு ஆணையிட்டான்.
ஆயிரம் மல்லர்கள் கும்பகருணனை எழுப்புமாறு அவன் அரண்மனையை அடைதல்
சென்றனர், பத்து நூற்றுச்
சீரிய வீரர் ஓடி,
‘மன்றல் அம் தொங்கலான்தன்
மனம்தனில் வருத்தம் மாற
இன்று இவன் முடிக்கும் ‘என்னா,
எண்ணினர்; எண்ணி, ஈண்ட,
குன்றினும் உயர்ந்த தோளான்
கொற்ற மாக் கோயில் புக்கார்.49
உரை
பத்து நூற்றுச் சீரிய வீரர் - ஆயிரம் சிறந்த வீரர்கள்;
மன்றல் அம் தொங்கலான் தன் - மணம்மிக்க அழகிய மலர்
மாலையணிந்த இராவணன் தன்; வருத்தம் மாற- மனவருத்தம்
தீரும்படி; இன்று இவன் முடிக்கும் என்னா- இன்றே
இக்கும்பகருணன் பகையை முடிப்பான் என; எண்ணினர் எண்ணி
ஈண்ட- மனத்தில் பலவாறு எண்ணியவர்களாய் நெருங்கச் சூழ்ந்து;
குன்று என உயர்ந்த தோளான் - குன்றைவிட உயர்ந்த
தோள்களையுடைய கும்பகருணனது; கொற்றமாக்கோயில் - வெற்றி
தங்கிய பெரிய அரண்மனைக்கண்; ஓடிச் சென்றனர் புக்கார் -
ஓடிச் சென்று புகுந்தார்கள்.
| |
சென்றனர்-முற்றெச்சம். பத்துநூறு-பண்புத்தொகை.
|
திண்திறல் வீரர் வாயில்
திறத்தலும், சுவாச வாதம்
மண்டுற, வீரர் எல்லாம்
வருவது போவது ஆக,
கொண்டு உறுதடக்கை பற்றி,
குலம் உடை வலியினாலே
கண் துயில் எழுப்ப எண்ணி,
கடிது ஒரு வாயில் புக்கார். 50
உரை
கண்துயில் எழுப்ப எண்ணி- கொற்றமாக்கோயில் புக்க பத்து
நூற்றுச் சீரியவீரர் கும்பகருணனைத் துயில் எழுப்பக் கருதிச்
சென்று; திண்திறல் வீரன்- வலிமை மிக்க கும்பகருணனது;
வாயில் திறத்தலும் - அரண்மனை வாயிலைத் திறந்தவுடன்;
சுவாதவாதம் - மூச்சுக்காற்றானது; மண்டுற - மிகுதியாக
வீசியதால் அதன் வேகத்திலிருந்து தப்பித் துயிலெழுப்புவதற்காக;
வீரர் எல்லாம் வருவது போவதாக- அவ்வீரர்கள் தாங்கள்
அலைக்கழிக்கப் படுவதைக் கண்டு; கொண்டுறு தடக்கை பற்றி-
வலிமை கொண்டுள்ள தங்கள் கைகளை ஒருவருக்கொருவர்
பிடித்துக் கொண்டு; குலமுடை வலியினாலே - ஒன்றாகத் திரண்ட
தங்கள் வலிமையால்; கடிது ஒருவாயில் புக்கார் - விரைவாக
வேறொரு வாயில் வழியாக புகுந்தார்கள்.
| |
ஒரு வாயில் என்றது-பக்க வாயில் ஆகும். நேராக உள்ள
வாயிலிற் புகுந்து மூச்சுக்காற்றால் தாக்கப்பட்டவர் பக்கவாயிலிற்
புகுந்து எழுப்பலாயினர் என்க.
|
வீரர்கள் கும்பகருணனைத் துயிலெழுப்பச் சங்கு தாரை முதலியவற்றால் ஒலி எழுப்புதல்
‘இங்கு இவன் தன்னை யாம் இன்று
எழுப்பல் ஆம் வகை ஏது? ‘என்று,
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு,
மெய் துணுக்கம் உற்றார்;
அங்கைகள் தீண்ட அஞ்சி,
ஆழ் செவி அதனினூடு,
சங்கொடு தாரை, சின்னம்,
சமைவுறச் சாற்றலுற்றார். 51
உரை
துங்கவெவ்வாயும் மூக்குங்கண்டு - கும்பகருணனது வலிய
வாயினையும் மூக்கினையும் கண்டு; மெய் துணுக்கமுற்றார் -
உடல் நடுங்கிய அவ்வீரர்கள்; அங்கைகள் தீண்ட அஞ்சி-
தங்கள் கைகளினால் அவனைத் தொட்டு எழுப்பப் பயந்து; இங்கு
இவன் தன்னை- இன்று இப்போது இவனை; யாம் இன்று
எழுப்பலாம் வகை ஏது என்று- வேறு வகையில் யாம் இவனை
இன்று எழுப்புவது எவ்வாறு என எண்ணி; ஆழ் செவி அதனினூடு
-ஆழமான காதுகளின் உள்ளே; சங்கொடு, தாரை, சின்னம் - சங்கு
அடிக்கும் தாரை, ஊதுகொம்பு ஆகிய கருவிகளின் மூலம்,சமைவுறச்
சாற்றலுற்றார்-பெருத்த பேரொலி செய்யத் தொடங்கினார்கள்.
ஓசை முதலியவற்றால் கும்பகருணனை எழுப்ப இயலாமையை இராவணனுக்கு உரைப்ப, அவன் குதிரைகளை மேலே செலுத்துமாறு கூறுதல்கோடு, இகல் தண்டு, கூடம்,
குந்தம், வல்லோர்கள் கூடி,
தாடைகள், சந்து, மார்பு,
தலை எனும் அவற்றில் தாக்கி,
வாடிய கையர் ஆகி, மன்னவற்கு
உரைப்ப, ‘பின்னும்
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும்
விரைவின் ‘என்றான்.52
உரை
கோடு இகல் தண்டு- மலையோடு மாறுபட்ட தண்டாயுதமும்;
கூடம் - சம்மட்டியும்; குந்தம் - ஈட்டி; வல்லோர்கள் கூடி-
என்னும் இப்படைக்கலங்களைக் கையாள்வதில் பயிற்சி
வலிமையுடையவர்கள் ஒருங்கு கூடித்; தாடைகள்- கும்பகருணனது
கன்னத்தாடைகள்; சந்து- உடல் பொருத்துக்கள்; மார்பு- மார்பு;
தலை- தலை; எனும் இவற்றில் தாக்கி- என்னும் உடலின்
மெல்லிய பகுதிகளில் எல்லாம் தாக்கி; வாடிய கையர் ஆகி-
துயிலெழுப்ப முடியாது கை ஓய்ந்தவர்களாய்; மன்னவற்கு
உரைப்ப- இராவணனிடம் சென்று அதனைத் தெரிவிக்க;
பின்னும நீடிய பரிகள் எல்லாம் விரைவின் நிரைத்திடும்-
அதற்கு அவன் இதற்கு மேல் நீண்ட குதிரைகளை எல்லாம்
சீக்கிரம் வரிசையாக நிரம்பச் செலுத்துங்கள்; என்றான்.
குதிரைகளால் துகைக்க, அதனால் கும்பகருணன் இனிது உறங்குதல்கட்டுறு கவன மா ஓர்
ஆயிரம் கடிதின் வந்து,
மட்டு அற உறங்குவான் தன்
மார்பு இடை, மாலை மான
விட்டு உற நடத்தி, ஓட்டி,
விரைவு உள சாரி வந்தார்;
தட்டுறு குறங்கு போலத்
தடம் துயில் கொள்வது ஆனான். 53
உரை
மட்டுஅற உறங்குவான் தன் - (இராவணன் ஆணை பெற்ற
வீரர்கள்) அளவு மீறி அதிகமாக உறங்குபவனான கும்பகருணனது;
மார்பிடை - மார்பில்; ஓர் ஆயிரம் - ஓராயிரம்; கட்டுறு
கவனமா - கடிவாளம் பூட்டப்பெற்ற விரைவாகச் செல்லும்
குதிரைகளுடன்; கடிதின் வந்து- விரைந்து வந்து; விட்டு உற
நடத்தி ஓட்டி- அவற்றை மார்பில் நடத்தி ஓட்டி;மார்பிடை
மாலைமான - அவனுடைய மார்புக்கு மாலை போல;
விரைவுளசாரி வந்தார் - விரைவாகச் சுற்றி வந்தார்கள்;
(அவ்வாறு அவர்கள் செய்த செயலால்) குறங்கு தட்டுறு போல-
துடையைத் தட்டுவது போலத்; தடந்துயில் கொள்வதானான்-
அவன் பெருந்துயில் கொள்ளலானான்.
| |
முன்பே அளவு மீறிய தூக்கம் குதிரைகளை நடத்தியதால்
உடம்பு பிடித்துவிட்டது போல் ஆகி பெருந்தூக்கமாய் விட்டது.
|
பணியாளர் கும்பகருணனை எழுப்ப இயலாமையை இராவணனுக்கு அறிவித்தல்
கொய் மலர்த் தொங்கலான் தன்
குரைகழல் வணங்கி, ‘ஐய!
உய்யலாம் வகைகள் என்று, இங்கு
எழுப்பல் ஆம் வகையே செய்தும்,
கய் எலாம் வலியும் ஓய்ந்த;
கவனமா காலும் ஓய்ந்த;
செய்யலாம் வகை வேறு உண்டோ?
செப்புதி, தரெிய ‘என்றார்.54
உரை
இராவணன் சூலம் மழு முதலியன எறிந்தாவது கும்பகருணனை எழுப்புக எனல்
‘இடை பேரா இளையானை,
இணை ஆழி மணி நெடுந்தேர்
படை பேரா வரும்போதும்,
பதையாத உடம்பானை,
மடை பேராச் சூலத்தால்,
மழு வாள் கொண்டு, எறிந்தானும்,
புடை பேராத் துயிலானைத்
துயில் எழுப்பிக் கொணர்க ‘என்றான்.55
உரை
ஆயிரம் வீரர் முசலம் கொண்டு கன்னத்தில் அடிக்கக் கும்பகருணன் துயிலெழுதல்
என்றலுமே அடிவணங்கி, ஈர்
ஐஞ்ஞூறு இராக்கதர்கள்,
வன்தொழிலால் துயில்கின்ற
மன்னவன்தன் மாடு அணுகி,
நின்று இரண்டு கதுப்பும் உற
நெடு முசலம் கொண்டு அடிப்ப,
பொன்றினவன் எழுந்தாற் போல்,
புடை பெயர்ந்து அங்கு எழுந்திருந்தான்.56
உரை
மூவகை உலகும் உட்க,
முரண் திசைப் பனைக்கை யானை
தாவரும் திசையின் நின்று
சலித்திட, கதிரும், உட்க,
பூ உளான், புணரி மேலான்,
பொருப்பினான் முதல்வர் ஆய
யாவரும் துணுக்குற்று ஏங்க,
எளிதினின் எழுந்தான் வீரன்.57
உரை
கும்பகருணனது உருவின் தன்மை
விண்ணினை இடறும் மோலி;
விசும்பினை நிறைக்கும் மேனி;
கண்ணெனும் அவை இரண்டும்
கடல்களின் பெரிய ஆகும்;
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர்
வேந்தன் பின்னோன்
மண்ணினை அளந்து நின்ற
மால் என வளர்ந்து நின்றான்.58
உரை
எழுந்த கும்பகருணன் உணவு முதலியன
உட்கொள்ளுதல்
உறக்கம் அவ் வழி நீங்கி உணத் தகும்
வறைக்கு அமைந்தன ஊனொடு வாக்கிய
நறைக் குடங்கள் பெறான் கடை நக்குவான்
இறக்க நின்ற முகத்தினை எய்துவான்.59
உரை
ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடம் க(ள்)ளும் நுங்கினான்;
ஏறுகின்ற பசியை எழுப்பினான்;
சீறுகின்ற முகத்து இரு செங்கணான்.60
உரை
எருமை ஏற்றை ஓர் ஈர் அறுநூற்றையும்
அருமை இன்றியே தின்று இறை ஆறினான்
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு
உருமை ஏற்றைப் பிசைந்து எரி ஊதுவான்.61
உரை
இருந்த போதும் இராவணன் நின்றெனத்
தரெிந்த மேனியன்; திண் கடலின் திரை
நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான்;
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான்;62
உரை
உதிர வாரியோடு ஊனொடு எலும்பு தோல்
உதிர வாரி நுகர்வது ஓர் ஊணினான்;
கதிர வாள் வயிரப் பணைக் கையினான்;
கதிர வாள் வயிரக் கழல் காலினான்;63
உரை
இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான்;
வரும் களிற்றினைத் தின்றனன்; மால் அறா
அரும் க(ள்)ளில் திரிகின்றது ஓர் ஆசையான்;64
உரை
சூலம் ஏகம் திருத்திய தோளினான்;
சூல மேகம் எனப் பொலி தோற்றத்தான்;
காலன்மேல் நிமிர்மத்தன்; கழல் பொரு
காலன்; மேல் நிமிர் செம் மயிர்க் கற்றையான்;65
உரை
எயில் தலைத் தகர தலத்து இந்திரன்
எயிறு அலைத்த கர தலத்து எற்றினான்;
அயில் தலைத் தொடர் அங்கையன்; சிங்க ஊன்
அயிறலைத் தொடர் அங்கு அகல் வாயினான்;66
உரை
உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர்
குடல் கிடந்து அடங்கா நெடுங் கோளினான்;
கடல் கிடந்தது நின்றதன்மேல் கதழ்
வட கடுங்கனல் போல் மயிர்ப் பங்கியான்;67
உரை
திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட
மிக்கு அடங்கிய வெங்கதிர் அங்கிகள்
புக்கு அடங்கிய மேருப் புழை என
தொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான்;68
உரை
காம்பு இறங்கும் கன வரைக் கைம்மலை
தூம்பு இறங்கும் மதத்தின துய்த்து உடல்
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினன்;
பாம்பு உறங்கும் படர் செவிப் பாழியான்;69
உரை
தமையன் அழைத்த செய்திகேட்டு, இராவணன் முன்சென்று கும்பகருணன் வணங்குதல்
‘கூயினன் நும்முன் ‘என்று அவர் கூறலும்
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ;
வாயில் வல்லை நுழைந்து மதிதொடும்
கோயில் எய்தினன் குன்று அ(ன்)ன கொள்கையான்.70
உரை
நிலை கிடந்த நெடுமதிள் கோபுரத்து
அலை கிடந்த இலங்கையர் அண்ணலைக்
கொலை கிடந்த வேல் கும்பகருணன் ஓர்
மலை கிடந்தது போல வணங்கினான்71
உரை
இராவணன் தம்பியைத் தழுவி, அவனுக்கு உணவு முதலியன அளித்துப் போர்க்கோலம் செய்தல்
வன் துணைப் பெருந்தம்பி வணங்கலும்
தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்
நின்ற குன்று ஒன்று நீள் நெடுங் காலொடும்
சென்ற குன்றைத் தழீஇ அன்ன செய்கையான்.72
உரை
உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறைக்
குடன் நிரைத்தவை ஊட்டி தசைக் கொளீஇ
கடல் நுரைத் துகில் சுற்றி கதிர்க் குழாம்
புடை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான்.73
உரை
பேர விட்ட பெரு வலி இந்திரன்
ஊர விட்ட களிற்றொடும் ஓடுநாள்
சோர விட்ட சுடர்மணி ஓடையை
வீரபட்டம் என நுதல் வீக்கினான்.74
உரை
மெய் எலாம் மிளிர் மின்வெயில் வீசிட
தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய
கய்யின் நாகம் என கடல் மேனியில்
தயெ்வம் நாறு செம் சாந்தம் உம் சேர்த்தினான்.75
உரை
விடம் எழுந்தது போல் நெடு விண்ணினைத்
தொட உயர்ந்தவன் மார்பு இடைச் சுற்றினான்
இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள்
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான்.76
உரை
கும்பகருணன் போர்க்கோலம் செய்ததற்குக்
காரணம் வினாவுதல்
அன்ன காலையில் ‘ஆயத்தம் யாவையும்
என்ன காரணத்தால்? ‘என்று இயம்பினான்
மின்னின் அன்ன புருவமும் விண்ணினைத்
துன்னு தோளும் இடம் துடியா நின்றான்.77
உரை
இராவணன் கும்பகருணனைப் போர் செய்ய ஏவுதல்
‘வானரப் பெருந் தானையர் மானிடர்
கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும்
ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர்
போனகத் தொழில் முற்றுதி போய் ‘என்றான்.78
உரை
கும்பகருணன் போர் நேர்ந்தமைக்கு வருந்தி இராவணனுக்கு அறிவுரை கூறுதல்
‘ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே? 79
உரை
‘கிட்டியதோ செரு? கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ? முனம் சொன்ன சொற்களால்
திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே!80
உரை
‘கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால் ஐயா!81
உரை
‘புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு
குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் 82
உரை
‘கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும்;
கெடுத்தனை நின் பெருங் கிளையும்; நின்னையும்
படுத்தனை; பலவகை அமரர் தங்களை
விடுத்தனை; வேறு இனி வீடும் இல்லையால்.83
உரை
‘அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால்; அதன்
திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும்
நிறம் உனக்கு அளித்தது; அங்கு அதனை நீக்கி நீ
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார்.84
உரை
‘தஞ்சமும் தருமமும் தகவுமே அவர்
நெஞ்சமும் கருமமும் உரையுமே; நெடு
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்
உஞ்சுமோ? அதற்கு ஒரு குறை உண்டாகுமோ?85
உரை
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு
ஒன்று உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்
நன்று அது; நாயக! நயக்கிலாய் எனின்
பொன்றினை ஆகவே கோடி; போக்கு இலாய்.86
உரை
‘காலினின் கருங்கடல் கடந்த காற்றது
போல வன் குரங்கு உள; சீதை போகிலள்;
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
கோல் உள; யாம் உளேம்; குறை உண்டாகுமோ?87
உரை
‘தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின்
ஐ அறு தம்பியோடு அளவளாவுதல்
உய்திறம்; அன்று எனின் உளது வேறும் ஓர்
செய்திறம்; அன்னது தரெியக் கேட்டியால்;88
உரை
‘பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம் ‘என்று உணரக் கூறினான்.89
உரை
இராவணன் கும்பகருணனைச் சினந்து
மொழிதல்
‘உறுவது தரெிய அன்று; உன்னைக் கூயது
சிறுதொழில் மனிதரைக் கோறி சென்று; எனக்கு
அறிவுடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை;
வெறிவிது உன் வீரம் ‘என்று இவை விளம்பினான்.90
உரை
‘மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும்
உறங்குதி போய் ‘என உளையக் கூறினான்.91
உரை
‘மானிடர் இருவரை வணங்கி மற்றும் அக்
கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்
ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;
யான் அது புரிகிலேன்; எழுக போக! ‘என்றான்.92
உரை
‘தருக என்தேர் படை சாற்று என் கூற்றையும்;
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும்;
இருகை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
பொருக வெம்போர் ‘எனப் போதல் மேயினான்.93
உரை
போருக்கு எழுந்த இராவணனை வணங்கி ‘பொறுத்தி ‘என்று கூறி, கும்பகருணன் போருக்குச் செல்ல விடைபெறுதல்
அன்னது கண்டு அவன் தம்பியானவன்
பொன் அடி வணங்கி ‘நீ பொறுத்தியால் ‘என
வல் நெடுஞ் சூலத்தை வலத்து வாங்கினான்
‘இன்னம் ஒன்று உரை உளது ‘என்னக் கூறினான். 94
உரை
‘வென்று இவண் வருவென் என்று
உரைக்கிலேன்; விதி
நின்றது, பிடர் பிடித்து
உந்த நின்றது;
பொன்றுவென்; பொன்றினால்,
பொலன்கொள் தோளியை,
“நன்று “ என, நாயக,
விடுதல் நன்று அரோ.95
உரை
‘இந்திரன் பகைஞனும் இராமன் தம்பி கை
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்;
தந்திரம் காற்று உறு சாம்பல்; பின்னரும்
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய்.96
உரை
‘என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் நன்று அரோ.97
உரை
‘இற்றை நாள் வரை, முதல்,
யான் முன் செய்தன
குற்றமும் உள எனின்
பொறுத்தி; கொற்றவ!
அற்றதால் முகத்தினில்
விழித்தல்; ஆரிய!
பெற்றனென் விடை ‘என,
பெயர்ந்து போயினான். 98
உரை
மிக்க நன்று.
ReplyDeleteTAMILANDA
ReplyDeleteமிக நல்ல முயற்சி. தற்போதைய கொரானா காலத்திற்கு இதைச் விட ஆகச் சிறந்த கருவி வேறில்லை. தமிழ்த்துறையினருக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteSuper paa
ReplyDeletePls give meaning
ReplyDeleteGood Job.
ReplyDelete