Wednesday, March 27, 2013

வினாவங்கி - இரண்டாமாண்டு நான்காம் பருவம்

தமிழ் வினாவங்கி - இரண்டாமாண்டு - நான்காம் பருவம் - CLA4D


இரண்டாமாண்டு நான்காம் பருவம் - பொதுத்தமிழ் பயிலும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம், தேர்வு நெருங்கி விட்டது, நீங்கள் அதிக மதிப்பெண்களைப் பெறும் பொருட்டு முனைப்புடன் படித்து வருவீர்கள் என்பது தெரியும். அதற்கு பெரிதும் துணைநிற்பது முந்தைய தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேள்விகள் எப்படி கேட்கப்பட்டுள்ளன என்பதை ஆய்ந்து படிக்கும் முறையாகும். இங்கு உங்கள் வசதிக்காக முந்தைய பல்கலைக்கழகத் தேர்வுகளில் கேட்கப்பட்டக் கேள்விகளை தொகுத்தளித்துள்ளேன். அவற்றிற்கான விடைகளைத் தயார் செய்து மீண்டும் மீண்டும் படித்து தேர்வில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
    மு.தியாகராஜ்
தமிழ்த்துறைத்தலைவர்
குருநானக் கல்லூரி (சுழற்சி-2)

        தமிழ் அடித்தளப்படிப்பு - தாள்-4
வினாத்தாள் அமைப்பு முறை - வினாக்கள் பகிர்வு
பாடம்                    பகுதி-    பகுதி-   பகுதி-   
செய்யுள்                     5           3           2    
இலக்கணம்                  3           -           -    
நாடகம்                       -          2           1    
இலக்கிய வரலாறு          4           2           1    
மொழிபெயர்ப்பு              -           -           1    
மொத்தம்                    12          7           5    
           10*2=20     5*5=25      3*10=30    
குருநானக் கல்லூரி (சுழற்சி - 2)
தமிழ்த் துறை
தமிழ் வினா வங்கி - இரண்டாமாண்டு
நான்காம் பருவம்  - CLA4D
நேரம்: 3 மணிநேரம்                                        மதிப்பெண்கள்: 75
பகுதி- :                                                            (10*2=20)
(2 மதிப்பெண் கேள்விகள்)
(2 மதிப்பெண் வினாக்கள் 12 கொடுக்கப்பட்டு 10 க்கு விடையளிக்க வேண்டும்)
    1.   பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பு எப்பேற்பட்டது என்கிறாள் தலைவி? (april 2012)
    2.   குறிஞ்சித் தலைவி தலைவனுடனான நட்பின் அளவு குறித்துக் கூறுவன யாவை? (april 2011)
    3.   ’கொங்குதேர் வாழ்க்கை’ எனத்தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் கூற்றாக அமைந்துள்ளது? இப்பாடலைப் பாடிய புலவர் யார்? (Nov 2012)
    4.   “எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” – யார் கூற்று? (april 2012)
    5.   குறுந்தொகைத் தலைவியின் நட்பு எத்தகையது? (Nov 2011)
    6.   குறுந்தொகை காட்டும் குரங்கின் தன்மையை விளக்குக. (Nov 2011)
    7.   மடலேறுதல் என்றால் என்ன? (Nov 2011)
    8.   அன்புடை நெஞ்சம் ஒன்று சேர்வதற்குக் குறுந்தொகைப் பாடல் கூறும் உவமை எது? (Nov 2010)
    9.   பண்பெனப்படுவது யாது? (Nov 2010)
    10. கல்லா வன்பறழ் – பொருள் கூறுக. (Nov 2010)
    11.  நீயாகிரென் கணவனை
யானகியர் நின் நெஞ்சுநேர்பவளே – இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தருக. (Nov 2010)
    12.  செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே – விளக்குக. (Nov 2012)
    13.  “யானை வேட்டுவன் யானையும் பெறுமே” – இடஞ்சுட்டி பொருள் விளக்குக. (april 2012) (april 2011)
    14. கோப்பெருஞ்சோழனின் சிறப்பு யாது? (Nov 2011)
    15.  பிசிராந்தையார் ‘எம் கோ’ என்று யாரைக் குறிப்பிட்டுப் பெருமையடைகிறார்? (Nov 2010)
    16.  உயிரின் பாதுகாவலன் எனக் கோப்பெருஞ்சோழன் யாரைக் கூறுகிறார்? (Nov 2011)
    17. பாலைவழியில் செல்லும் அந்தணர் தோற்றத்தைப் பாலைக்கலி வழி எடுத்துரைக்க. (april 2011)
    18.  பாலைத்திணை குறித்து விளக்குக. (Nov 2010)
    19.  உமணர் என்பவர் யார்? (Nov 2011)
     20. ’நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று’ – இடம் சுட்டிப் பொருள் தருக. (Nov 2012)
    21.  ”இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடிஇச் சென்றனள்”- விளக்குக. (april 2012)
    22. பட்டினப்பாலை, காவிரி ஆற்றை எத்தைகைய சிறப்புடையது என்கிறது. (april 2012) (april 2011)
    23. பட்டினப்பாலை எத்துறையில் பாடப்பட்டுள்ளது பாடியவர் யார்? (Nov 2012)
    24. பொருள் வயிற்பிரிவு என்றால் என்ன?
    25. பொருண்மொழிக் காஞ்சி என்றால் என்ன? (april 2012)
    26. பாடாண்திணை- குறிப்பு வரைக. (Nov 2012)
    27. இயன்மொழித்துறை என்றால் என்ன? (april 2011) (Nov 2012) (Nov 2011) (Nov 2010)
    28. வஞ்சித்திணை – விளக்கம் தருக. (april 2011)
    29. பொதுவியல் விளக்கம் தருக. (april 2012)
    30. நெய்தல் திணை என்றால் என்ன? (april 2012) (april 2011)
    31.  கலித்தொகை எத்தகைய பாவினால் ஆன நூல்? (april 2011)
    32. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எவ்வளவு? (Nov 2010)
    33. ஆற்றுதல் என்பது யாது? (Nov 2012)
    34. பட்டினப்பாலை எந்தத்துறையில் பாடப்பெற்றுள்ளது? (april 2012)
    35. பட்டினப்பாலையின் பாட்டுடைத்தலைவன் யார்? (Nov 2010)
    36. சேரமன்னர்களைச் சிறப்பித்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது? (april 2012) (april 2011)
    37. நல்ல குறுந்தொகை – குறிப்பு வரைக. (april 2012)
    38. எட்டுத்தொகை நூல்களுள் அகம் பற்றிய நூல்கள் இரண்டினைக் குறிப்பிடுக. (Nov 2012)
    39. சிறுபாணாற்றுப்படை – குறிப்பு வரைக. (Nov 2012)
    40. சிறுபாணாற்றுப் படையினைப் பாடியவர் யார்? (Nov 2010)
    41. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது? (Nov 2010)
    42. புறநானூறு குறிப்பு வரைக. (Nov 2010)
    43. பரிபாடல் குறிப்பு வரைக. (april 2011)
    44. புதுமைப் பித்தன் எழுதிய இரண்டு சிறுகதைகளைக் குறிப்பிடுக. (april 2012)
    45. நாடகத்தமிழ் குறித்துக் குறிப்பிடும் இரு நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக. (april 2011)
    46. தமிழ் நாடகத்தந்தை எனப்படுபவர் யார்? (Nov 2011)
    47. மனோன்மணிய நாடகம் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது? (Nov 2012)
    48. வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை வெளிப்படுத்தும் நாடகம் எது? அதை எழுதியவர் யார்? (Nov 2012)
     49. பாண்டியன் பரிசின் ஆசிரியர் யார்? (Nov 2011)
  50. பத்துப்பாட்டில் அடிஅளவில் மிகப்பெரிய நூல் எது? மிகச்சிறிய நூல் எது? 

     (5 மதிப்பெண் கேள்விகள்)
  பகுதி- :                                                         (5*5=25)
  (5 மதிப்பெண் வினாக்கள் 7 கொடுக்கப்பட்டு 5 க்கு விடையளிக்க வேண்டும்)
1.   பிசிராந்தையார் வருவார் என்று கோப்பெருஞ்சோழன் கூறிய கருத்துக்களை எழுதுக. (april 2012) (april 2011)
2.   கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபோது மொழிந்தது என்னும் கருத்துடன் பாடிய பாடலை விளக்குக. (Nov 2012)
3.   கோப்பெருஞ்சோழனின் நட்பு எத்தகையது? (Nov 2011)
4.   கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் பற்றி கூறுவனவற்றை எழுதுக.
5.   நும் பாடப்பகுதியில் உள்ள பாடாந்திணைப் பாடல் கருத்துகளை விளக்குக. (Nov 2011)
6.   நும் பாடப்பகுதியில் உள்ள முல்லைத் திணையிலமைந்த குறுந்தொகைப் பாடற்பொருளை விளக்குக.
7.   புல்லாற்றூர் எயிற்றியனார் பாடல் கருத்துகளை எழுதுக. (Nov 2011)
8.   “கொங்குதேர் வாழ்க்கை…” என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடல் செய்தியை விளக்குக. (april 2012)
9.   தலைவியின் நாணத்தைத் தலைவன் எவ்விதம் போக்கினான்? (Nov 2011)
10. கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே – இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக. (Nov 2011)
11.  குறுந்தொகையில் பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடிய பாடலில் ‘மனை இனிமை தருமா?’ என்று தோழி ஏன் வினவுகின்றாள்? (april 2011)
12.  ’அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து’ எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலின் பொருளைச் சுட்டுக. (Nov 2012)
13.  குறுந்தொகை – குறிப்பு வரைக. (Nov 2012)
14. தோழி கூற்றுப்பாடல்களின் கருத்துகளைக் குறுந்தொகைப் பாடல்களின் மூலம் விளக்குக. (Nov 2011)
15.  கலித்தொகை வழி உடன்போக்குச் சென்ற தலைவியின் நிலையைக் குறிப்பிடுக. (april 2012)
16.  தலைவியைக் கண்டீரா’ என்று வினவிய செவிலிக்கு முக்கோற்பகவர் கூறிய அறிவுரைகள் யாவை? (Nov 2010)
17. பாலைக்கலிப் பாடலில் உடன்போக்கில் சென்ற தலைவி சிறந்த கற்புடையவள் என்று அந்தணர்கள் கூறும் கருத்துக்களைத் தொகுத்துரைக்க. (april 2011)
18.  நெய்தற்கலியில் தோழி, தலைவனைத் தெருட்டி உரைத்த அறிவுரைகளை எழுதுக. (Nov 2012)
19.  பட்டினப்பாலை காட்டும் இரவு நேரக்காட்சிகளைப் புலப்படுத்துக. (april 2012)
20. காவிரியாறு பட்டினப்பாலையில் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டுள்ளது? (Nov 2010)
21.  புகாரில் விளங்கும் அறம்பொருந்திய அட்டிற் சாலைகளை விளக்குக.
22. அன்னம் கூறும் பேழையின் அடையாளத்தைக் குறிப்பிடுக. (april 2012)
23. பாண்டியன் பரிசில் வீரப்பன் தோழர்களிடம் கூறும் தன் வரலாற்றை எழுதுக. (april 2012)
24. ஆத்தாக்கிழவி அன்னத்தைக் காப்பாற்றும் திறத்தினை எடுத்துரைக்க.
25. அகநானூற்று நூல் அமைப்பினை எடுத்துக்காட்டுக. (april 2012)
26. ஆத்தா கிழவியின் பண்புகளைச் சுட்டுக. (Nov 2012)
27. அன்னம் ஆத்தா உருமாறி வெளிச்சென்றதைக் காட்சிப்படுத்துக. (Nov 2012)
28. செலவழுங்குதல் துறையை விளக்குக. (Nov 2011)
29. நும் பாடப்பகுதியில் உள்ள வஞ்சித்திணைப் பாடற்கருத்துக்களை எழுதுக. (Nov 2011)
30. ’மாமலர் முண்டக….’ என்ற நெய்தற்கலிப் பாடல்களைத் தொகுத்துரைக்க. (Nov 2011)
31.  பதிற்றுப்பத்தின் சிறப்புகளைக் கூறுக.
32. பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள ஆற்றுப்படை நூல்கள் குறித்து எழுதுக. (Nov 2010)

                       (10 மதிப்பெண் வினாக்கள்)
      பகுதி- :                                                      (3*10=30)
(10 மதிப்பெண் வினாக்கள் 5 கொடுக்கப்பட்டு 3 க்கு விடையளிக்க வேண்டும்)
1.   நட்பின் மேன்மையைக் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் வழிநின்று நிறுவுக. (april 2012)
2.   இயன்மொழித் துறையிலமைந்த புறநானூற்றுப் பாடல்களின் சிறப்பினைத் தொகுத்துரைக்க.
3.   வாழ்வியல் உண்மைகளை நெய்தற்கலி வழிநின்று புலப்படுத்துக. (april 2012)
4.   பாலைக்கலியில் கண்டோர் கூறும் உலக நியதியைத் தொகுத்துரைக்க. (Nov 2011)
5.   குறுந்தொகைத் தலைவியின் நிலையை விளக்குக.
6.   ’முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்’ – இக்கூற்றைப் பட்டினப்பாலை வழி நின்று நிறுவுக.
7.   பட்டினப்பாலை குறிப்பிடும் பரதவர்களின் வாழ்வியலை விளக்குக.
8.   கரிகாலனின் சிறப்புகளைப் பட்டினப்பாலை எவ்வாறு கூறுகின்றது? (Nov 2010)
9.   ’எறித்தரு கதிர்’ – எனத்தொடங்கும் கலித்தொகைப் பாடல் உணர்த்தும் வாழ்வியல் நெறிகளைப் புலப்படுத்துக.
10. பாண்டியன்பரிசில் இடம்பெறும் அன்னத்தின் பாத்திரப்படைப்பை – மதிப்பிடுக. (april 2012)
11. எட்டுத்தொகை நூல்களுள் அகப்பொருள் நூற்கருத்துக்களைத் தொகுத்தெழுதுக. (april 2012)
12. பாண்டியன் பரிசில் வேலனின் பாத்திரப்படைப்பைச் சித்தரிக்க. (Nov 2012)
13. அன்னத்தின் பண்பு நலன்களை விவரிக்க. (Nov 2010)
14. பாரதிதாசனின் பாத்திரப் படைப்பினை விளக்குக. (Nov 2011)
15. சங்க இலக்கியம் வாழ்வியல் இலக்கியம் என்னும் கருத்தை ஆய்க. (Nov 2012)
16. சங்க இலக்கியப் பாடல் திறனை நுமது பாடப்பகுதி கொண்டு வெளிப்படுத்துக. (Nov 2011)
17. எட்டுத்தொகை நூல்கள் குறித்துக் கட்டுரைக்க.
(இவற்றுடன் அலுவலக மொழிபெயர்ப்பு கேள்வி ஒன்றும் 10 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் –அவற்றை படவடிவில் கீழே இணைத்துள்ளேன்  பயன்படுத்தவும்)



*************

Monday, March 25, 2013

வினா வங்கி - முதலாமாண்டு இரண்டாம் பருவம்

வினா வங்கி -முதலாமாண்டு - இரண்டாம் பருவம் - தமிழ் CLA2G


முதலாமாண்டு இரண்டாம் பருவம் பயிலும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம், தேர்வு நெருங்கி விட்டது, நீங்கள் அதிக மதிப்பெண்களை பெறும் பொருட்டு முனைப்புடன் படித்து வருவீர்கள் என்பது தெரியும். அதற்கு பெரிதும் துணைநிற்பது முந்தைய தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேள்விகள் எப்படி கேட்கப்பட்டுள்ளன என்பதை ஆய்ந்து படிக்கும் முறையாகும். இங்கு உங்கள் வசதிக்காக முந்தைய பல்கலைக்கழகத் தேர்வுகளில் கேட்கப்பட்டக் கேள்விகளை தொகுத்தளித்துள்ளேன். அவற்றிற்கான விடைகளைத் தயார் செய்து மீண்டும் மீண்டும் படித்து தேர்வில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
   மு.தியாகராஜ்
தமிழ்த்துறைத்தலைவர்
குருநானக் கல்லூரி (சுழற்சி-2)


குருநானக் கல்லூரி (சுழற்சி - 2)
தமிழ்த் துறை
தமிழ் வினா வங்கி - இரண்டாமாண்டு
இரண்டாம் பருவம்  - CLA2G
நேரம்: 3 மணிநேரம்                                        மதிப்பெண்கள்: 75
பகுதி- :                                                        (10*2=20)
(2 மதிப்பெண் கேள்விகள்)
(2 மதிப்பெண் வினாக்கள் 12 கொடுக்கப்பட்டு 10 க்கு விடையளிக்க வேண்டும்)
    1.   நமச்சிவாய மந்திரம் அருங்கலமாக விளங்கும் பான்மையைச் சுட்டுக. (april 2010)
    2.   மனிதனுக்கு நற்றுணையாக விளங்குவது எதுவென திருநாவுக்கரசர் கூறுகிறார்? (Nov 2011)
    3.   சிவபெருமான் எத்தகையவன்?
    4.   நமச்சிவாயப் பதிகம் பாடப்பட்ட பின்னணி யாது?  april 2011
    5.   இருள் கெடுக்கும் விளக்காவது யாது? (april 2011)
    6.   உலகில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது எது?
    7.   திருநாவுக்கரசர் நமசிவாய பதிகத்தை பாடிய பின்னணியை விளக்குக.
    8.   பாவத்தை அறுப்பது எது என்று திருநாவுக்கரசர் கூறுகிறார்.
    9.   மாதோர் பாகத்தான் – யார்? (april 2011)
    10. தொல்லையின்பத்து இறுதி கண்டவள் யார்? விளக்குக. (april 2010)
    11.  ”இராமனுக்கு துணையாகச் செல்வேன்” என்று குலசேகர ஆழ்வார் கூறக்காரணம் யாது? (Nov 2011)
    12.  கண்ணனின் பிள்ளை விளையாட்டுகள் இரண்டினைத் தருக.
    13.  கண்ணன் துயிலும் அழகைக் கூறுக.
    14. குன்றைக் குடையாகக் கொண்டவன் யார்?
    15.  கண்ணன் செய்த இரு புராண நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
    16.  நளன் இழந்த உருவை எவ்வாறு பெற்றான்?
    17. தமயந்தி புரோகிதனுக்கு இட்ட பணி யாது? (april 2010)
    18.  குலசேகரர் பற்றி நீவிர் அறிவன யாவை? (april 2011)
    19.  ”என்னை இருங்கானில் நீத்த இகல் வேந்தன்” – இடம் சுட்டி பொருளுரைக்க. (april 2011)
    20. நளன் எந்த நகரில் யாருடன் இருந்தான்?
    21.  நளனைக் கண்டுவந்த புரோகிதன் தமயந்தியிடம் கூறிய மறுமொழியினை எடுத்துரைக்க.(Nov 2011)
    22. நளன் தேரோட்டிய சிறப்பினைப் புலப்படுத்துக.
    23. நளனை அவனுடைய பிள்ளைகள் எங்கே கண்டனர்.
    24. நபிகளிடம் மான் கூறிய தன் வரலாறு யாது? (april 2010)
    25. சீறாப்புராணம் – குறிப்பு வரைக.(Nov 2011)
    26. சீறா – என்னும் சொல்லின் பொருளைத் தருக.
    27. இசுலாம் மதத்தின் மூலமந்திரம் யாது?
    28. மானை நோக்கிச் சென்ற நபிகள் நாயகம் எவற்றையெல்லாம் பார்க்கவில்லை?
    29. சீடர்களிடம் இயேசு பெருமான் கூறியது யாது? (april 2010)
    30. பாவலன் பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன் பால் நின்ற கலி – இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.
    31.  இடஞ்சுட்டி விளக்குக.
கோவில் பூனை புலியைப் பிடித்திடக்
கூட்டத்தோடு வந்து விழுந்தது.
    32. இடஞ்சுட்டி விளக்குக.
”உங்கள் அரசு ஒருவன் ஆள நீர் ஓடிப்போந்து
இங்கண் உறைதல் இழுக்கன்றோ”
    33. இடஞ்சுட்டி விளக்குக. (april 2010)
முன்னை வினையால் முடிந்ததோ மொய்குழலாள்
என்னைத்தான் காண விழைந்ததோ..
    34. இடஞ்சுட்டி விளக்குக. (nov 2011)
’ உங்கள் கண்ணில் உறக்கமும் உள்ளதோ
  உள்ளம் கூட உறங்குவது என்னவோ’ 
    35. இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.
”ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி உண்டெனில் அருளே’
    36. இலக்கணக் குறிப்பு எழுதுக. (april 2010)
மூவாமயல், நோக்கின், உறுமதி, அடைந்தது
    37. இலக்கணக் குறிப்பு எழுதுக. (nov 2011)
தடங்கண்ணி, வெண்குடை, மதியே, தர்மதேவன்
    38. இலக்கணக் குறிப்பு எழுதுக – மாப்பிணை, சுவை அறுமொழி
    39. இலக்கணக் குறிப்பு வரைக.- அருவினை, அறுமொழி.
    40. இலக்கணக்குறிப்பு வரைக.- மலர்க்கண், முறை முறை
    41. இலக்கணக் குறிப்பு எழுதுக.
என்றன் குலப்பெருஞ்சுடரே,  கண்டாய்,  நோக்கார், ஒழிக.
    42. . நளவெண்பா – குறிப்பு வரைக. . (april 2010)
    43. பிணை நானே என்ற நபிக்கு வேடன் கூறிய மறுமொழி யாது? (april 2010)
    44. சீறாப்புராணத்தில் இடம்பெறும் வேடனின் தோற்றம் எவ்வாறிருந்தது?(nov 2011)
    45. வேடனிடம் நபிகள் கூறியது யாது?
    46. இயேசுவின் வஞ்சக நண்பன் யார்?
    47. ஏசுநாதர் செபம் செய்யும் போது தோழர்கல் என்ன செய்துகொண்டிருந்தனர்?(nov 2011)
    48. யூதாஸ் இயேசுவை எவ்வாறு காட்டிக் கொடுத்தான்?
    49. ஏசு காவியம் – குறிப்பு வரைக.
    50. ”பாடு” என்னும் சொல்லின் பொருளினை விளக்குக.
    51.  இயேசு காவியம் ஆசிரியர் பற்றிக் கூறுக.
    52. தேவாரம் – குறிப்பு வரைக. (nov 2011)
    53. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் குறிப்பு வரைக.
    54. உமறுப்புலவர் – குறிப்பு வரைக.
    55.  இந்தியாவில் வழங்கும் நால்வகை முக்கிய மொழிக்குடும்பங்களைக் குறிப்பிடுக.
    56. ’அரிசி’ என்னும் தமிழ்ச்சொல் கிரேக்க, இலத்தீன் மொழிகளில் எவ்வாறு வழங்கப்படுகின்றது?
    57. தமிழ் எந்த மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது?
    58.  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அண்மையில் எங்கு எப்போது நடந்தது?
    59. உலகப்பொதுமறை எனப்படும் அற நூல் எது?
    60. மொழி விளக்கம் தருக.
    61.  செம்மொழியின் வரையறை யாது?
    62. செம்மொழி இலக்கண நூல்களைக் கூறுக.


(5 மதிப்பெண் கேள்விகள்)
  பகுதி- :                                                   (5*5=25)
  (5 மதிப்பெண் வினாக்கள் 7 கொடுக்கப்பட்டு 5 க்கு விடையளிக்க வேண்டும்)
1.   நாவுக்கரசர் இறைவனின் பெருமைகளை எவ்வாறு புகழ்ந்துள்ளார். . (april 2010)
2.       ’நன்னெறியாவது நமச்சிவாயமே’ என்று இறைவனைப் புகழ்ந்து பாடும் திருநாவுக்கரசரின் பாடல்கள் பற்றி விளக்குக. (Nov 2011)
3.       நற்றுணையாவது நமசிவாயவே – விளக்குக.
4.       நமச்சிவாயத் திருப்பதிகம் உரைக்கும் செய்திகளைத் தருக.
5.       நமச்சிவாயப் பதிகம் எவற்றை அணிகலன்களாகக் கூறுகின்றது.
6.       தேவாரப் பாடல்கள் குறித்து எழுதுக.
7.   நளனுக்கும் அவனது குழந்தைகளுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை எழுதுக. (april 2010)
8.   மானின் சிறப்பியல்பை உமறுப்புலவர் எங்கனம் சுட்டியுள்ளார்? . (april 2010)
9.       மானுக்கு யான் பிணை என்று கூறிய நபிகள் நாயகத்திடம் வேடன் கூறியது யாது? (Nov 2011)
10. தேவகியின் வருத்தத்தை குலசேகரர் வழி நின்று விளக்குக. . (april 2010)
11.   கண்ணனின் இளைமைப் பருவத் திருவிளையாடல்களாக குலசேகராழ்வார் கூறுவன யாவை? (Nov 2011)
12.   கண்ணன் அழகினை குலசேகராழ்வார் கூறும் விதத்தினை எடுத்துரைக்க.
13.   யசோதை பெற்ற இன்பங்களாகத் தேவகி கூறுவன யாவை?
14.   குலசேகராழ்வார் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
15.   நந்தன் பெற்றனன் நல்வினை என்று ஆழ்வார் கூறுவன யாவை?
16. தமயந்தி நளனைத் தேட எடுத்துக்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிடுக.
17. தமயந்தி அடைந்த துன்பத்தினைப் புலப்படுத்துக.
18.   நளவெண்பா – நூல் குறித்து எழுதுக. (Nov 2011)
19.   நளனைத் தேடிப் புரோகிதன் அனுப்பப்பட்டதைக் கூறுக. (april 2011)
20.   தமயந்தியின் இரண்டாம் சுயம்வரத்தின் நோக்கத்தைப் புலப்படுத்துக.
21.   இயேசு காவியத்தில் வஞ்சக நண்பன் செய்த செயல்களைக் கூறுக. (Nov 2011)
22.   இயேசு தன் சீடர்களிடம் கூறியதை விவரிக்க.
23.   இயேசு பிரான் செபம் செய்த திறத்தினை எடுத்துரைக்க.
24.   தியாகத்தின் வரலாற்றைக் கூறும் நூல் இயேசுகாவியம் என்னும் கருத்தை விளக்குக.
25.   உள்ளிருந்து உதிரம் வடிக்கின்றேன் என்று இயேசு கூறியன யாவை?
26.    பன்னிரு சைவத்திருமுறைகளைப் பட்டியலிடுக. (april 2011)
27. கவிஞர் கண்னதாசனின் கவிதைச் சிறப்பைச் சுட்டுக. . (april 2010)
28. பல்லவர் கால இலக்கியங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக. . (april 2010)
29. மான் முகம்மது நபியிடம் உரைத்ததைக் குறிப்பிடுக.
30. சீறாப்புராணத்தில் அரபி வேடனின் காட்சியை உமறுப்புலவர் எவ்வாறு கூறுகிறார்?
31. வீடு பெற்று உயர்ந்து வாழ்ந்தேன் என வேடன் கூறியன எவை? (april 2011)
32. தமிழின் தொன்மையை விளக்குக.
33. தமிழ் உயர்தனிச்செம்மொழி ஆகுமாற்றை நிறுவுக.
34. இந்திய செம்மொழிகளை விளக்குக.
35. தமிழின் சிறப்புகளைக் கூறுக.


(10 மதிப்பெண் வினாக்கள்)
      பகுதி- :                                           (3வு10=30)
(10 மதிப்பெண் வினாக்கள் 5 கொடுக்கப்பட்டு 3 க்கு விடையளிக்க வேண்டும்)
1.   நபிகள் நாயகம் மானுக்கு பிணை நின்ற வரலாற்றை விளக்குக. . (april 2010)
2.       நபிகள் நாயகத்திடம் மான் கூறியனவற்றைத் தொகுத்துரைக்க(Nov 2011)
3.       தேவகியின் ஆற்றாமை உணர்வை விளக்குக. (april 2010)
4.       கண்ணனை நினைந்து தேவகி கூறும் கருத்துக்களை விவரிக்க. (Nov 2011)
5.       நளன் தமயந்தி மீண்டும் ஒன்று சேர்ந்த வரலாற்றை விளக்குக.
6.       நளன் தன் மக்களோடு உரையாடிய உரையாடல்களைத் தொகுத்துரைக்க.
7.       தமயந்தி அறிவுத் திறமுடையவளாகப் படைக்கப்பட்டுள்ள பாங்கினை விளக்கி எழுதுக.
8.       வஞ்சக நண்பன் குறித்து இயேசுகாவியம் கூறுவன யாவை?
9.       கண்ணதாசன் ’பாடுகளின் பாதை’ என்னும் பகுதியில் கூறியுள்ள செய்திகளைத் தொகுத்துரைக்க.
10.   தமிழில் பக்தி இலக்கியங்கள் குறித்து கட்டுரை ஒன்று எழுதுக. (Nov 2011)
11.   பக்தி இலக்கியங்கள் வலியுறுத்தும் மாண்புகளை எடுத்துரைக்க. (april 2011)
12.   செம்மொழித் தகுதிகளை விவரிக்க.
13.   ஆழ்வார்களின் பக்திச் சிறப்பு குறித்து கட்டுரைக்க
14.   தமிழின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய பணிகள் யாவை?
15.   தொன்மொழியான தமிழ், காலத்தேவைகளுக்கேற்ப வளர்ந்து வாழும் மொழியாகத் திகழுமாற்றைப் பாராட்டுக. (april 2011)
16.   செம்மொழித் தகுதிகளை விவரிக்க.
17.   தமிழின் தொன்மையைப் புலப்படுத்துக.
18.   தமிழ்ச் செம்மொழி அறிந்தேர்ப்புக்காக நடைபெற்ற அறப்போராட்டங்களை விளக்குக.
19.   சமயங்கள் ஆற்றியுள்ள தமிழ்ப் பணியை விரித்துரைக்க.
20.   சைவமடங்கள் தமிழுக்காற்றிய தொண்டுகள் குறித்து எழுதுக.

(இவற்றுடன் 10 மதிப்பெண்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பு வினாவும் கேட்கப்படும் அவற்றை படவடிவில் கீழே இணைத்துள்ளேன். பயன்படுத்தவும்)